ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது..

விழுப்புரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது..

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் கன மழை

Villuppuram District News : விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் மழை பெய்த நிலையில் தற்போது இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி தொடங்கி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மாண்டஸ் புயலாக வலுவெடுத்து மாமல்லபுரம் அருகே கடந்த வாரம் கரையை கடந்தது. பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் புயல் கரையை கடந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை 16 ஆம் தேதி உருவாக இருப்பதாகவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் மழை பெய்த நிலையில் தற்போது இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

இதையும் படிங்க : மரக்காணம் அருகே மாண்டஸ் புயலின் தாக்கம் குறித்து பார்வையிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது.மேலும் விழுப்புரத்தில் பருவமழையின் போது ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், நகராட்சி சார்பிலும் பொதுமக்கள் புகார் அளிக்க இலவச எண்கள் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விழுப்புரம், மரக்காணம், வானூா், செஞ்சி, திண்டிவனம் உள்பட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

வீடுர் அணை நிரம்பியுள்ளதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பிற்காக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தாழ்வான நீர்வழி பாதையில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மழை தொடரும் பட்சத்தில் விளை நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும். இதனால் பயிர்கள் அழுகும் நிலை உண்டாகும் எனவே பயிர்களை காப்பது எப்படி என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Vizhupuram