முகப்பு /விழுப்புரம் /

Villupuram Weather Update : விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கனமழை.. சுரங்க பாதையை சூழ்ந்த வெள்ளம்..

Villupuram Weather Update : விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கனமழை.. சுரங்க பாதையை சூழ்ந்த வெள்ளம்..

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கனமழை

Villupuram Weather Update : விழுப்புரம்  மாவட்டத்தில் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

கத்திரி வெயில் காலம் தொடங்கிய போதிலும் கடந்த 3 நாட்களாக வெயிலின் அளவு குறைவாகவே இருந்து வருகிறது. இதனிடையே கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.இதனால் விழுப்புரம் நகரில் முக்கிய சாலைகள், தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கனமழை

இதையும் படிங்க : இயற்பியல் பாடம்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. நெல்லையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து..

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழையினால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சில விவசாயிகள் மழை பெய்ததை ஒட்டி விவசாய நிலங்களில் உழுது வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தரைபாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதித்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Villupuram, Weather News in Tamil