Home /viluppuram /

அடுக்கி வைக்கப்பட்ட 6 வீரர்களின் தலைகள் - நேமூரில் 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால அரியவகை சிற்பம்

அடுக்கி வைக்கப்பட்ட 6 வீரர்களின் தலைகள் - நேமூரில் 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால அரியவகை சிற்பம்

விழுப்புரம்

விழுப்புரம் - நேமூர் அரிய சிற்பம்

Villupuram District | விழுப்புரம் அருகே செஞ்சி சாலையில் அமைந்துள்ளது நேமூர். இக்கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் கடந்த ஜுலை மாதம் 1,200 ஆண்டு பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சாலையில் உள்ள நேமூர் கிராமத்தின் பல பகுதிகளில் வரலாற்று சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கடந்த ஜுலை மாதம் கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.
அரசவை பாணியில் இல்லாமல், கிராமிய பாணியில் அமைந்திருந்த இச்சிற்பத்தில் மான் கட்டப்பட்டு, கையில் வாளுடன் ஒரு வீரன் இருப்பது போன்று காணப்படுகிறது .
இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு ஆகும்.

மேலும் இதனருகே 6 முகங்களைக் கொண்ட சிற்பம் ஒன்றும் இருந்தது. இது முருகனை குறிப்பதாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் இச்சிற்பம் கொற்றவைக்கு பலி கொடுக்கப்பட்ட வீரர்களின் தலைகளைக் கொண்டது என்று தெரிய வந்துள்ளது.

இதுபற்றி விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான செங்குட்டுவன் கூறியதாவது,

“நேமூர் ஏரிக்கரையில் உள்ள கொற்றவை சிற்பத்தின் அருகிலேயே (கி.பி.9ஆம் நூற்றாண்டு) சுமார் இரண்டரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட தனி சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இதில் ஒன்றன் கீழ் ஒன்றாக 6 முகங்கள் காணப்படுகின்றன. அதற்குக் கீழும் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.” என்றார்.

இதையும் படிங்க:  அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

இது கொற்றவைக்கு பலி கொடுக்கப்பட்ட வீரர்களின் தலைகள் எனும் ஐயத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ள மூத்த தொல்லியலாளர் எஸ்.ராஜகோபால், இந்த அமைப்பு முதன்முதலாக தமிழ்நாட்டில் இங்கு தான் கிடைப்பது போல் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் "இவை வேண்டுதல் நிறைவேற கொற்றவைக்கு தங்களைத் தாங்களே பலி கொடுத்துக் கொண்ட வீரர்களின் தலைகள்" எனும் கருத்தை மூத்த கல்வெட்டு ஆய்வாளர்கள் டி.துளசிராமன், வில்லியனூர் வேங்கடேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:  விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு குட்நியூஸ் : ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

காளிக்குத் தங்களை பலி கொடுத்துக்கொண்ட வீரர்களின் தலைகள் மூங்கில்களில் வரிசையாகத் தொங்குவதாக கலிங்கத்துப்பரணியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குறிப்பிடத்தக்கதாகும். இதனை நேமூரில் இருக்கும் சிற்பம் இதை நினைவூட்டுகிறது. கொற்றவைக்குப் பலி கொடுக்கும் அரிகண்டம் அல்லது நவகண்ட சிற்பங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ளன. ஆனால் வீரர்களின் தலைகள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்த நிலையில் காணப்படும் அரிய சிற்பம் தமிழ்நாட்டில் முதன்முறையாக நேமூர் கிராமத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்லவர் காலத்தைச் சேர்ந்த 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிற்பம் தமிழ்நாட்டு சிற்பக்கலை வரலாற்றிற்கு புதிய வரவாகும் என செங்குட்டுவன் கூறினார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி