முகப்பு /விழுப்புரம் /

"அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்" தலையால் ஓவியம் வரைந்து அசத்திய விழுப்புரம் ஓவியர்!

"அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்" தலையால் ஓவியம் வரைந்து அசத்திய விழுப்புரம் ஓவியர்!

X
விழுப்புரம்

விழுப்புரம் ஓவியர்

HBD Ajith kumar | விழுப்புரம் அருகே நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறும் விதமாக தலையில் பிரஷை அணிந்துக் கொண்டு தல அஜித் படத்தை வரைந்துள்ளார் ஓவியர் செல்வம்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகே அஜித்தின் பிறந்த நாளையொட்டி தலையால் அஜித்தின் உருவத்தை வரைந்து அசத்திய ஓவியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விழுப்புரம் அருகே திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையை சேர்ந்த ஓவியர் செல்வம், திரைப்பட நடிகர் அஜித்குமாரின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக கைகளைப் பயன்படுத்தாமல் தன்னுடைய தலையில் பிரஷை அணிந்துக் கொண்டு தல அஜித் படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

திரைத்துறையின் தல என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் அவர்களின் 52வது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இன்றைய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை வென்ற முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் அஜித் குமார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அஜீத் மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றிருக்கிறார்.

மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களில் ஒருவர் என்றும் ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றவர் அஜித்.

இதையும் படிங்க | நடிகர் அஜித்தை பற்றி பலரும் அறிந்திடாத 10 தகவல்கள்...

அஜித் ஒரு சிறந்த மனிதர், ரசிகர்கள் மனதில் 'தல' என்று அன்போடு நிலைத்திருப்பவர். அதனால் தல என்பதை குறிக்கும் விதமாக ஓவியர் செல்வம் கைகளைப் பயன்படுத்தாமல், சிறுகம்பியில் வளையம் மாதிரி செய்து அதில் பிரஷை வைத்து தன்னுடைய தலையில் மாட்டிக் கொண்டு தன் தலையை அசைத்து அசைத்து நீர் வண்ணத்தில் பிரஷை தொட்டு 'தல' படத்தை தலையால் வரைந்து அசத்தி தனது பிறந்தநாள் வாழ்த்தை அஜித்துக்கு தெரிவித்திருக்கிறார். இதை வரைந்து முடிக்க இவருக்கு வெறும் 15 நிமிடங்கள் தான் ஆகியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Ajith, Ajith fans, Local News, Viluppuram S22p13