அரியலூர் அமீனாபாத் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் வெங்கடேசன்,( 22) டி.பார்ம்., படித்துவிட்டு, அரியலூரில் உள்ள பிரபல மெடிக்கலில் (அப்போலோ) வேலை செய்து வருகின்றார்.
இவர் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் வங்கியில் லோன் போட்டு ரூ.1.60 லட்சம் மதிப்பிலான பஜாஜ் பல்சர் என்.எஸ்., 160 மாடல் பைக் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8ம் தேதி தனது பைக்கை மெடிக்கல் முன் நிறுத்திவிட்டு வேலை செய்துள்ளார். அன்றிரவு மெடிக்கலில் தூங்கிவிட்டு, மறுநாள் 9ம் தேதி எழுந்துவந்து பார்த்தபோது, பைக்கை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
மனமுடைந்த வெங்கடேசன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார் . அதன்பின் இந்த சம்பவம் குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து,வழக்கு பதிந்துள்ளார் வெங்கடேசன்.
இந்நிலையில், விக்கிரவாண்டி டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமையிலான போலீசார் பனையபுரம் கூட்ரோட்டில் நேற்று முன்தினம் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த மர்மநபர்கள் ஒரு சிலர் போலீசார் வாகன பறிமுதல் செய்வதை பார்த்துவிட்டு, மர்ம நபர்கள் கொண்டு வந்த பைக்கை போட்டுவிட்டு, தப்பியோடினர்.
அந்த நபரை கீழே போட்டு சென்ற பைக்கை பறிமுதல் செய்து விசாரித்தபோது, அரியலூரில் திருடுபோன வெங்கடேசன் பைக் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் வெங்கடேசனை வரவைத்து திருடுபோன அவருடைய பைக்கை ஒப்படைத்தார்.
காணாமல் போன பைக்கே ஒப்படைத்த காவல்துறைக்கு வெங்கடேசன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து பைக்கை எடுத்து சென்றார்.
மேலும் பைக்கை விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர் காவல்துறையினர். இந்த சம்பவம் மற்ற காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.