முகப்பு /செய்தி /விழுப்புரம் / திடீரென பெய்த ஆலங்கட்டி மழை..! உற்சாகத்தில் விழுப்புரம் மக்கள்..!

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை..! உற்சாகத்தில் விழுப்புரம் மக்கள்..!

விழுப்புரத்தில் ஆலங்கட்டி மழை..!

விழுப்புரத்தில் ஆலங்கட்டி மழை..!

விழுப்புரத்தில் சில தினங்களாகவே வெப்பம் அதிகமாக காணப்பட்ட நிலையில் ஆலங்கட்டி மழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் விழுப்புரத்தில் புதிய பேருந்துநிலையம், வழுதரெட்டி, கம்பன் நகர், ஆசிரியர் நகர், கீழ்பெரும்பாக்கம் என நரின் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதே போன்று  விழுப்புரத்தை சுற்றியுள்ள கானை, பிடாகம், கோலியனூர், வளவனூர், சிறுவந்தாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டி மழை பெய்ததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

Read More : ஒரே மாதத்தில் 5 மடங்கு அதிகரித்த கொரோனா பரவல் : தமிழக அரசை அலெர்ட் செய்த மத்திய சுகாதாரத்துறை!

top videos

    மேலும் விழுப்புரத்தில் சில தினங்களாகவே வெப்பம் அதிகமாக காணப்பட்ட நிலையில் ஆலங்கட்டி மழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.ஆலங்கட்டி மழை பெய்ததால் ஐஸ் கட்டிகளை சேகரித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    First published:

    Tags: Rain updates, Rain water, Villupuram