Home /viluppuram /

விழுப்புரத்தில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் - மிஸ் பண்ணாதீங்க

விழுப்புரத்தில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் - மிஸ் பண்ணாதீங்க

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    நவீனகால வாழ்வில் இன்றியமையாததாக இருக்கிறது மின்சாரம். செல்போன் முதல், பெரிய தொழிற்சாலை வரை எங்கும் நிறைந்து காணப்படும் இது, தன் சக்தியால் அளப்பெரிய பயனை கொடுத்து வருகிறது.

    அதைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் சிரமத்தை தடுக்க அவ்வப்போது மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், குறைகேட்பு கூட்டம் குறித்து விழுப்புரம் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கோட்ட அளவிலான மாதாந்திர மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அந்தந்த செயற் பொறியாளர் அலுவலகங்களில் ஒவ்வொரு மாதமும், செவ்வாய் கிழமை தோறும் காலை 11 மணிக்கு நடக்கிறது.

    அதன்படி, முதல் செவ்வாய் விழுப்புரம், 2 ஆம் செவ்வாய் கண்டமங்கலம், 3ஆம் செவ்வாய் செஞ்சி, 4ஆம் செவ்வாய் திண்டிவனத்திலும் நடக்கிறது. மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி