முகப்பு /விழுப்புரம் /

தென்பேர் கிராமசபை கூட்ட தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை இடமாற்றுவதாக உறுதியளித்த விழுப்புரம் ஆட்சியர்..

தென்பேர் கிராமசபை கூட்ட தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை இடமாற்றுவதாக உறுதியளித்த விழுப்புரம் ஆட்சியர்..

X
விழுப்புரம்

விழுப்புரம் - தென்பேர் ஊராட்சி

Villupuram District | விழுப்புரம் மாவட்டம் தென்பேர்  கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், தென்பேர் ஊராட்சியில், உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆறுமுறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அதில் இந்த ஆண்டு முதன் முறையாக உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கிராம சபை கூட்டத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவரும் நீரை பாதுகாத்தல், நீரினை சிக்கனமாக பயன்படுத்துதல், அனைத்து வீடுகளிலும் மழைநீர் கட்டமைப்புகளை உருவாக்குதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்தல், பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைத்தல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஊராட்சிகளில் உள்ள நீர் நிலைகளை கணக்கெடுத்தல், விவசாயப் பணிகளுக்கு சொட்டு நீர் பாசனங்கள் பயன்படுத்துதல், சமூக காடுகள் உருவாக்குதல் போன்ற திட்டச் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதே ஆகும்.

விழுப்புரம் - தென்பேர் ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டம்

அதன் அடிப்படையில்,தென்பேர் ஊராட்சியில், 1,330 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில்  நிறைவேற்றப்பட்டது. அதோடு இந்த கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனை உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டதோடு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்ற உறுதியையும் மக்களுக்கு அளித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    கிராம சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சியில் ஊர் மக்கள் கலைந்து சென்றனர்.

    First published:

    Tags: Local News, Villupuram