Home /viluppuram /

தள்ளுவண்டியில் உணவகம்.. மனநிறைவு தரும் விழுப்புரம் பட்டதாரி தம்பதியரின் சொந்த தொழில்..

தள்ளுவண்டியில் உணவகம்.. மனநிறைவு தரும் விழுப்புரம் பட்டதாரி தம்பதியரின் சொந்த தொழில்..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram District News : விழுப்புரம் கண்டமானடி பகுதியை சேர்ந்த ராஜேஷ், மோகனப்பிரியா தம்பதியர் கடந்த 6 வருடங்களாக தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தி வருகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவு வாயிலின் எதிரே, பட்டதாரி தம்பதியினர் தள்ளுவண்டி உணவு கடை நடத்தி வருகிறார்கள். மனத்திருப்தியுடன் மற்றவருக்கு உணவு அளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தள்ளுவண்டி கடை நடத்தும் தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் கண்டமானடி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (33), மோகனப்பிரியா (30) தம்பதியர் கடந்த 6 வருடங்களாக தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தி வருகிறார்கள். ராஜேஷ் M.Com படித்து முடித்துள்ளார். மோகனாப்ரியா பி. ஏ ஆங்கிலம் (முழுமையாக படித்து முடிக்கவில்லை). இவர்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இருவரும் சேர்ந்து இந்த தள்ளுவண்டி கடையை கடந்த 6 வருடங்களாக நடத்தி வருகிறார்கள். இங்கு கிடைக்கும் உணவுகளின் சுவை காரணமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பட்டப்படிப்புகள் முடித்துவிட்டு தள்ளுவண்டியில் உணவகம் நடத்துவது பற்றி ராஜேஷ் கூறியதாவது :

நான் எம் காம் (M.COM) படித்து முடித்துள்ளேன். முதலில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். என்னுடைய மனைவி மோகனப்பிரியா தான் இந்த தள்ளுவண்டி கடை நடத்தி வந்தார்.

நேரம் பற்றாக்குறையினால் குடும்பத்திடம் நேரத்தை செலவிட முடியவில்லை. அதன் பிறகு தனியார் வேலையை விட்டுவிட்டு மனைவிக்கு துணையாக இந்த கடையை நடத்த தொடங்கினேன். கிட்டத்தட்ட 6 மாதங்களாக இந்த கடையை சேர்ந்தே நடத்தி வருகிறோம்.

எங்களிடம் புதினா சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், கருவேப்பிலை சாதம், வெஜ் ரைஸ், முட்டை, சிக்கன் கிரேவி போன்ற பல வகை உணவுகள் தருகிறோம்.. காலை 6 மணிக்கு வேலையை ஆரம்பிப்போம். எல்லா சாதத்தையும் சமைக்க 12 மணி ஆகிவிடும். அதன்பிறகு வீட்டில் இருந்து உணவை இங்க கொண்டு வருவோம்.12:30 மணி முதலே உணவு விற்க ஆரம்பித்துவிடும். ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் என இருப்பதால் அனைவரும் தள்ளுவண்டி கடைக்கு வருகை புரிந்து சாப்பிடுவார்கள். ஒரு சாதம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.
முட்டை 5 ரூபாயாகும்.

சாதத்தை வீட்டிலேயே நல்ல முறையில் சமைத்து, பாத்திரத்தில் இங்கு கொண்டு வருவோம். நாங்க சமைக்கும் உறவின் சுவை மற்றவர்கள் பிடித்ததால் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் முதல் வேலை செய்யும் அனைவரும் உணவு பொட்டலங்களை வாங்கி செல்வார்கள். கடைக்கு என தின வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

ஒரு சில நேரத்தில் வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். ஒரு சில நேரங்களில் மந்தமாக செல்லும். மழை நேரங்களில் முகூர்த்த நாட்களில் வியாபாரம் டல்லாக இருக்கும்.

குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு மனைவியுடன் இந்த தள்ளுவண்டி கடை நடத்துவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தள்ளுவண்டி கடையை நடத்தினாலும் இதில் வரும் வருமானம் எங்களுக்கு போதுமானதாக இருக்கிறது.

முதலில் பல சரிவுகளை கண்டிருந்தாலும், தற்போது நல்ல முறையில் வியாபாரம் நடக்கிறது என்பதில் மிக சந்தோஷமாக இருக்கிறது.

என்ன படிப்பு படித்திருந்தாலும் மனதுக்குப் பிடித்த வேலை செய்வதில் ஒரு தனிப்பட்ட சுகம் இருக்கிறது என மகிழ்ச்சியுடன் கூறினார் ராஜேஷ்
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி