Home /viluppuram /

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தக்காளி விலை... - கிலோ ரூ.70க்கு விற்பனை!

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தக்காளி விலை... - கிலோ ரூ.70க்கு விற்பனை!

Gradual

Gradual increase in the price of tomatoes - 70 rupees per kilo of tomatoes sold

Villupuram : விழுப்புரம் சந்தைகளில் தக்காளி விலை அதிகரித்திருப்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். 

    சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், விழுப்புரம் சந்தைகளில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

    கடந்த சில மாதங்களாக , சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாயாக இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக, தற்போது தக்காளியின் வரத்து, குறைவாக இருப்பதால், விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த நான்கு மாதங்களாக தக்காளி 20 ரூபாய் 30 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆனது. அப்போ பொதுமக்கள் அதிக அளவில் தக்காளி வாங்குவதற்கு முன் வந்தார்கள் . ஒவ்வொரு நபரும் 5 கிலோ 10 கிலோ என்று தக்காளி வந்து செல்வார்கள்.

    ஆனால் தற்போது மழையின் காரணமாகவும் வரத்து குறைவால் தக்காளியின் விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. 25 கிலோ கொண்ட ஒரு தக்காளியின் பெட்டியின் விலை 1,600 ரூபாய்க்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள் வியாபாரிகள்.

    விலை அதிகரிப்பால், பொதுமக்கள் அதிக அளவில் தக்காளி வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. முதலில் கடைக்கு வருபவர்கள் விலை தக்காளியின் விலை கேட்கிறார்கள், விலை சொன்ன உடனே தக்காளி வாங்குவதற்கு தயங்குகிறார்கள். ஒரு கிலோ வாங்கும் நபர் அரைக்கிலோ கால் கிலோ என்ற தக்காளி அங்கு செல்கிறார்கள்.

    தற்போது உயர்ந்துள்ள தக்காளி விலையால் எங்களுக்கு ஞாபகம் ஏதுமில்லை நஷ்டம்தான் என கவலையுடன் கூறுகிறார்கள் வியாபாரிகள்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Tomato, Villupuram

    அடுத்த செய்தி