முகப்பு /விழுப்புரம் /

"விழுப்புரத்தில் ஆண்டுதோறும் புத்தகக்காட்சி நடத்த வேண்டும்" - மாணவர்கள் கோரிக்கை!

"விழுப்புரத்தில் ஆண்டுதோறும் புத்தகக்காட்சி நடத்த வேண்டும்" - மாணவர்கள் கோரிக்கை!

X
அரசு

அரசு பள்ளி மாணவர்கள்

Villupuram News|விழுப்புரம் மாவட்டத்தில், முதன் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள நகராட்சி திடலில்  12 நாட்கள் நடைபெறுகிறது. இதை ஆர்வத்துடன் கண்டு களித்த அரசு பள்ளி மாணவர்கள்

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் புத்தகத் திருவிழாவை ஆர்வத்துடன் கண்டுகளித்த அரசு பள்ளி மாணவர்கள்,  ஆண்டுதோறும் புத்தக திருவிழாவை  தொடர்ந்து நடத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், முதன் முறையாக மாபெரும் புத்தக காட்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள நகராட்சி திடலில் 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் கீழ் செயல்படும் அனைத்து திட்டங்கள் குறித்த செயல் விளக்கங்கள் ஸ்டாலாக அமைத்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை புத்தகத் திருவிழா நடைபெறாத நிலையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் மட்டுமல்லாது மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகியவையும் நடைபெற்று வருகிறது.

இந்த புத்தகத் திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் கீழ் செயல்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு தேவை என்பதற்காக புத்தகத் திருவிழாவில் திட்டங்கள் பற்றிய ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தன.

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக எண்ணும் எழுத்தும் திட்டம் பற்றியும் இல்லம் தேடி கல்வி திட்டம், காலை உணவு திட்டம் பற்றியும், கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு எப்படி கல்வி கற்பிக்கப்படுகிறது என்பதை பற்றிய கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதனை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

மேலும் இது பற்றி மாணவர்கள் கூறுகையில்,  “இந்த புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றுள்ள அனைத்து ஸ்டால்களும் எங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வகுப்பறையில் கற்பிக்கும் முறை பற்றி இங்கு ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த புத்தகத் திருவிழா இந்த ஆண்டோடு நிறுத்தாமல் வருடம் தோறும் இதுபோன்று நடத்த வேண்டும் எனவும் அரசுக்கு அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

First published:

Tags: Local News, Villupuram