Home /viluppuram /

மாடுகளை கட்டிப்போடும் இடத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்.. இடவசதியில்லாத கன்னிகாபுரம் அரசு பள்ளியின் அவலநிலை..

மாடுகளை கட்டிப்போடும் இடத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்.. இடவசதியில்லாத கன்னிகாபுரம் அரசு பள்ளியின் அவலநிலை..

விழுப்புரம்

விழுப்புரம் கன்னிகாபுரம் அரசு பள்ளியின் அவலநிலை..

Villupuram District News | விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாத நிலையில் அருகாமையில் உள்ள வீடுகளிலும், மாடுகளை கட்டிப்போடும் இடத்திலும் அமர்ந்து கல்வி கற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகயில் சரியான முறையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால், அருகாமையில் உள்ள வீடுகளில் கல்வி கற்பிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே உள்ள கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக இருந்தது. அதன்பின் நல்லாமூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இப்பள்ளியில் ஒரே ஒரு வகுப்பறை மட்டும்தான் உள்ளது. ஒன்றாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்திலும் , நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பக்கத்து வீட்டில் உள்ள மாட்டுக்கொட்டகைகளிலும், குடியிருப்புகளிலும், வீட்டின் வளாகங்களிலும் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும் இப்பள்ளியில்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி சமையல் கூடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் சரியான முறையில் இல்லாததால், இப்பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் மாணவர்களின் கல்வி தரத்திற்கு எந்தவித குறையுமில்லை. பள்ளியின் ஆசிரியர்கள் இரண்டு பேர், பள்ளி மேலாண்மை குழு சார்பில் இரண்டு ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் இரண்டு பேர் என மொத்தம் ஆறு ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு முறையாக கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வியில் எந்த தடையும் ஏற்படவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அனைத்து  வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடத்தை கட்டித்தர கோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுவரை பள்ளிக்கல்வித்துறை சார்பிலோ அல்லது மாவட்ட நிர்வாகம் சார்பிலோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பெரும் வருத்தத்தை தருகிறது என ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர் .

மாணவர்களின் கல்வியில் அக்கறை காட்டும் அரசாங்கம் , பள்ளிக்கு தேவையான அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டும் என ஆசிரியர் மாணவர்கள் மாவட்ட நிர்வாகதிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி