ஹோம் /விழுப்புரம் /

Cyclone Mandous | மாண்டஸ் புயல் எதிரொலி... விழுப்புரத்தில் நாளை இரவு அரசு பேருந்துகள் இயங்காது.. 

Cyclone Mandous | மாண்டஸ் புயல் எதிரொலி... விழுப்புரத்தில் நாளை இரவு அரசு பேருந்துகள் இயங்காது.. 

மாதிரி படம்

மாதிரி படம்

Viluppuram District News : மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை இரவு அரசு பேருந்து இயங்காது என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை இரவு அரசு பேருந்து இயங்காது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்திற்கு மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (09.12.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவாகி வரும் மாண்டஸ் புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் தற்போது மையம் கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் வட தமிழகம் இடையே புயல் கரையை கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : Cyclone Mandous | மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் விழுப்புரம் மாவட்டம் 

இதன் காரணமாக விழுப்புரம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரீருஇடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது.

புயல் அச்சுறுத்தலையொட்டி பேரிடர் மீட்பு படையினர் விழுப்புரம் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து துறை அதிகாரிகளும் புயலை எதிர்கொள்ள தக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.

இதனிடையே தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் உடனுக்குடன் நடைபெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

First published:

Tags: Local News, Vizhupuram