முகப்பு /விழுப்புரம் /

பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்ய மானியம்... புடலை விவசாயத்தில் அசத்தும் விவசாயி...!

பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்ய மானியம்... புடலை விவசாயத்தில் அசத்தும் விவசாயி...!

X
புடலங்காய்

புடலங்காய் பந்தலில் விவசாயி ஏழுமலை

Villupuram|விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டாரத்திற்கு உட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தில் அரசு வழங்கும் சலுகைகள் காரணமாக விவசாயிகள் பந்தல் அமைத்து காய்கறிகளை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டாரத்திற்கு உட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தில் விவசாயிகள் பந்தல் அமைத்து காய்கறிகளை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் புடலங்காய் சாகுபடியில் கலக்குகிறார் விவசாயி ஏழுமலை.

விவசாயிகள் நெல்லு, கரும்பு, கடலைப் போன்ற பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வந்தனர். இதனை மாற்றி அமைக்கும் வகையில், காய்கறிகளை விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பந்தல் வகை காய்கறி சாகுபடிக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.

காய்கறிகளில், சத்துகள் அதிகம் இருப்பதால் தினமும் 250 முதல் 300 கிராம் காய்கறிகளை அவசியம் சாப்பிட வேண்டும். ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பந்தலில் வளர்க்கப்படும் பாகல், பீர்க்கு, புடலை, கோவைக்காய்க்கு அதிக பங்கு உண்டு. இதனால் பந்தல் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க :  பச்சிளம் பெண் குழந்தை ஏரிக்கரையில் வீசி சென்ற கொடூரம் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டாரத்திற்கு உட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தில் உள்ள விவசாயி ஏழுமலை (60). இவர் 1/2 acre இடத்தில், புடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். புடலை சாகுபடி நல்ல லாபம் தரக்கூடிய பயிர் ஆகும். சரியான பராமரிப்பும், நீர் வளமும் இருந்தால் புடலையில் நல்ல வருமானம் பார்க்கலாம். அதுவும் ஆடி மாதத்தில் அதிக மகசூல் தரக்கூடிய பயிராகும். தற்போது நிரந்தர கல்தூண் பந்தலில் காய்கறி தோட்டத்தை அமைத்துள்ளார்.

ஏழுமலை புடலை ரகத்தில் குட்டை ரக புடலையே(White short )பயிர் செய்துள்ளார். புடலை நான்கு மாத காலத்தில் அறுவடை செய்யப்படும் பயிராகும். தகுந்த இடைவெளியில் குழிகள் தோண்டி, குழிக்கு மூன்று என்ற அளவில் விதை விதைக்க வேண்டும். முளைப்பு வந்த பிறகு, ஆரோக்கியமான இரண்டு நாற்றுகளை விட்டுவிட்டு, மற்ற நாற்றுகளை அகற்ற வேண்டும். முளைப்பு வந்த 15 நாட்களுக்குப் பிறகு, குழிக்கு 2 நாற்றுகள் நட வேண்டும். களையை கட்டுப்படுத்த மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க வேண்டும். 2 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை அடைய, தாவரத்திற்கு தாங்கிகளை அமைக்க வேண்டும்.

விதை ஊன்றிய 50 முதல் 60 நாட்களில் மகசூல் பெறலாம். குறைந்தபட்சம் 25 முதல் 30 பறி அறுவடை செய்யலாம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 கிலோ வரை புடலையை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு காயும் சராசரியாக 150 முதல் 200 கிராம் எடையுடன் இருக்க வேண்டும். தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நிச்சயமாக நான்கு மாதத்தில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை புடலையில் நல்ல வருமானம் பார்க்க முடியும் என்று விவசாயி ஏழுமலை கூறினார்.

மேலும் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற இங்கே கிளிக் செய்யவும்

மேலும் புடலை பந்தலுக்கு உள் பகுதியில் இரண்டு, மூன்று இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறிகளைக் கட்டித் தொங்கவிட்டால், பந்தல் காய்கறிகளைத் தாக்கும் குளவிகளை கட்டுப்படுத்தலாம். குளவிகள் இந்தப் பொறிக்குள் சென்று மாட்டிக்கொண்டு அவை இறந்துவிடும். இதனை செய்தால் பூச்சித்தொல்லை இல்லாமல் புடலையை பாதுகாக்க முடியும் என்று விளக்கமாக தெரிவித்தார் விவசாயி ஏழுமலை. மேலும் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர கல்தூண் பந்தல் மானியத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் புடலையை ஒரு ஏக்கருக்கு விவசாயம் செய்தால் , தோட்டக்கலைத் துறை மூலம் 8000 ரூபாய் மானியத்தில், புடலை நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

எனவே வெங்கந்தூர் கிராமத்தில் பல விவசாயிகள் பந்தல் காய்கறிகளில் புடலை பீர்க்கங்காய் சுரைக்காய் போன்ற காய்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

First published:

Tags: Local News, Viluppuram S22p13