முகப்பு /விழுப்புரம் /

"வந்தாச்சு ரம்ஜான்" செஞ்சி சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை! எத்தனை கோடி தெரியுமா?

"வந்தாச்சு ரம்ஜான்" செஞ்சி சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை! எத்தனை கோடி தெரியுமா?

X
செஞ்சி

செஞ்சி சந்தை

Gingee Ramzan goat sale | செஞ்சியில் நடைபெறும் வார சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது.

  • Last Updated :
  • Gingee, India

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமாகும். குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தாவரங்களை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், மதுரை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், விராலிமலை வேலூர், ஆம்பூர் திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள். இதனால், செஞ்சி வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக உள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தைக்கு அதிகாலை 3 மணி முதலே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர். மேலும் விற்பனைக்காக சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர்.

குறிப்பாக நாளை ஏப்ரல் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருப்பதால், ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆடுகள் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரையிலும், குறும்பாடுகள் ஜோடி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

இதனால் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் 5 கோடிகள் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவித்தனர். இது குறித்து பேசிய விவசாயிகளும் ஆடு வளர்ப்பவர்களும், ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியதால் ஆடுகள் விலை அதிகரித்து நல்ல லாபம் கிடைத்தது என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதையும் படிங்க | ஒரே இடத்தில் எதிரெதிரே கண்டறியப்பட்ட சோழர்கால சிற்பங்கள்..! விழுப்புரத்தில் நடந்த ஆய்வில் ஆச்சர்யம்..!

வியாபாரிகள் கூறுகையில், வழக்கத்தை விட இந்த வாரம் செஞ்சி வார ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வெள்ளாடுகளின் விலை அதிகரித்து உள்ளதாகவும் மேலும் செம்மறி ஆடுகளின் வருகை குறைந்துள்ளதால் வியாபாரிகளுக்கு ஏமாற்றம் எனவும் தெரிவித்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Gingee, Local News, Ramzan, Viluppuram S22p13