Home /viluppuram /

கால பைரவருக்கு பாலாபிஷேகம் செய்தால் நீலநிறத்தில் மாறும் அதிசயம்..ராகு கேது தோஷம் நீங்க பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரரை நாடி வரும் பக்தர்கள்

கால பைரவருக்கு பாலாபிஷேகம் செய்தால் நீலநிறத்தில் மாறும் அதிசயம்..ராகு கேது தோஷம் நீங்க பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரரை நாடி வரும் பக்தர்கள்

செஞ்சி

செஞ்சி அருணாச்சலேஸ்வரர் ஆலயம், விழுப்புரம் மாவட்டம்

Gingee விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு, ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்தால் நீலநிறத்தில் பால் மாறும் அதிசயம் நடைபெற்று வருகிறது..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவள்ளுவர் தெரு பீரங்கி மேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அபீதகுஜாம்பாள் சமேத, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள காலபைரவருக்கு ராகு கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்தால் நீலநிறத்தில் மாறும் அதிசயம் நடைபெற்று வருகிறது..

செஞ்சி பீரங்கி மேட்டில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான சரியான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. இக்கோயில் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலின் கட்டிடமானது சுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய் போன்றவைகளின் கலவையால் கட்டப்பட்டதாகும். இரண்டு துவாரபாலகர்கள் உடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறார் அருணாச்சலேஸ்வரர். வலது புறத்தில் ஸ்ரீ அபிதகுஜாம்பாள் அழகாக காட்சியளிக்கிறார்.


செஞ்சி அருணாச்சலேஸ்வரர் ஆலயம், விழுப்புரம் மாவட்டம்


இக்கோயிலின் மாத விஷேச நாட்களாக, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, சங்கடஹர சதுர்த்தி , தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்கள் மாதம் தோறும் விசேஷ நாட்களாக கருதப்படுகிறது. வருட நிகழ்ச்சிகளாக கார்த்திகை தீபம், அன்னாபிஷேகம்,மகா சிவராத்திரி , கூடாரவள்ளி நிகழ்ச்சிகள் வருட சிறப்பு நிகழ்ச்சிகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறப்பு பூஜைகள்:

இக்கோயில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக்கோயிலுக்கு வருபவர்கள் திருமண தடை நீங்குவதற்கும், ராகு-கேது தோஷம் நீங்கவும் இக்கோயிலுக்கு வருகை தந்து வழிபடுகிறார்கள்.


செஞ்சி அருணாச்சலேஸ்வரர் ஆலயம், விழுப்புரம் மாவட்டம்


வியாழக்கிழமை 18 சித்தர்கள் பூஜை, தட்சணாமூர்த்தி பூஜை, வெள்ளிக்கிழமை ராகு கால பூஜைகள், சனிக்கிழமை பெருமாள் பூஜை என ஒவ்வொரு நாளும் விசேஷ நாட்களாக இருக்கும்.

நீல நிறத்தில் மாறும் பால்:

இக்கோயிலில்   ராகு கேது தோஷம் நீங்குவதற்கு தேய்பிறை அஷ்டமியில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, சனி போன்ற கிழமைகளில் காலபைரவருக்கு பாலபிஷேகம் செய்தால், ராகு கேது தோஷம் நீங்கி வெண்மையான பால் நீலநிறமாக மாறுவது நம் கண் கூட பார்க்கலாம். பால் நீல நிறத்தில் மாறினால் ராகு-கேது தோஷம் நீங்கியதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


செஞ்சி அருணாச்சலேஸ்வரர் ஆலயம், விழுப்புரம் மாவட்டம்


இக்கோயிலில் ஒரே நேரத்தில் பெருமாளுக்கும் சிவனுக்கும் பூஜை நடைபெற்று வருகிறது. ஒரு பக்கமாக நமோ நாராயணா என்றும், மறுபக்கம் ஓம் நமசிவாய என்றும் திருநாமம் காதில் கேட்டுக் கொண்டே இருக்கும். இக்கோயிலுக்கு சென்னை, பெங்களூரு, தருமபுரி, பாண்டி, திருவண்ணாமலை போன்ற பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

Gingee Arunachaleswarar Temple
செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் ஆலயம்
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி