முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலின சமத்துவம் பற்றி விழிப்புணர்வு

விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலின சமத்துவம் பற்றி விழிப்புணர்வு

X
விழுப்புரம்

விழுப்புரம் அரசுப் பள்ளி

viluppuram | விழுப்புரம் மாவட்டம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிருக்கான சிறப்புசட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமைமாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு ஒருங்கிணைத்தது.

வளர்ந்து வரும் சமுதாயத்தில் பொதுமக்களிடம் எந்த ஒரு பாலின வேறுபாடும் இருக்கக்கூடாது என பல்வேறு பகுதிகளிலும், கல்லூரி, பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் மூன்றாம் பாலினத்தவர்களை ஒதுக்காமல் அவர்களையும் இணைத்து ஒரு சமூகம் உருவாக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நாடகங்கள், படங்கள் என பல வந்துள்ளது. தற்போது இந்த சமுதாயத்தில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை பொதுமக்கள் தங்களில் ஒருவராக நினைத்து வருகின்றனர்.

விழுப்புரம் பள்ளியில் மாணவிகள்

மேலும் இதுபற்றி பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிர்காண சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு மூலம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு முகாம் கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்தது. அதன் பின்பு மூன்றாம் பாலினத்தவர்களை வெறுத்து ஒதுக்காமல் அவர்களின் உணர்வுகளை மதித்து நம்மில் ஒருவராக போற்றி அவர்கள் முன்னேறுவதற்கு உதவ வேண்டும் என்ற வகையில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர்.

இந்த விழிப்புணர்வு நாடகம் மூலம் பள்ளி மாணவிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு சிறந்த திருநங்கைக்கான விருது பெற்ற மர்லிமா முரளிதரன் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்க்கை துயரத்தை பற்றியும் அதில் எப்படி முன்னேற வேண்டும் என பல விஷயங்களை பள்ளி மாணவர்களின் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.

ஒன்றாக நிற்கும் 100 ஆண்டு பழமையான அரச மரம், வேப்ப மரம்- திருநெல்வேலி அரசரடி விநாயகர் கோவில் சிறப்புகள்

மேலும் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ஆட்டோமேட்டிக் நாப்கின் மெஷின் 2, வளவனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெடார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கும் நாப்கின் மெஷின்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Viluppuram S22p13