Home /viluppuram /

விழுப்புரத்தில் மழையிலும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி..

விழுப்புரத்தில் மழையிலும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி..

விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் மழையிலும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி..

Villupuram - Vinayakar Chadurthi | காலை முதலே விழுப்புரத்தில் மழை பெய்து வந்த நிலையிலும் விநாயகர் சிலை வாங்குவதற்கு பொதுமக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விழுப்புரத்தில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழையிலும் விழுப்புரத்தின் முக்கிய நகர பகுதியான காமராஜர் வீதி, பாகர்ஷா வீதி, எம். ஜி ரோடு, கே. கே நகர் போன்ற பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தேவையான பூஜை பொருட்கள் அலங்கார பொருட்கள், பூ மாலைகள் என அனைத்தும் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

காமராஜர் வீதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டத்திற்கு தேவையான விநாயகர் சிலைகள் வாடிக்கையாளர்களின் கண்முன்னே செய்து தரப்பட்டது.
அருகிலேயே வர்ணம் பூசிய விநாயகர் சிலையும் விற்பனை செய்யப்பட்டது.

விழுப்புரத்தில் மழையிலும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி..


காலை முதலே விழுப்புரத்தில் மழை பெய்து வந்த நிலையிலும் விநாயகர் சிலை வாங்குவதற்கு பொதுமக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர்.

50 ரூபாயில் தொடங்கி  2,000 ரூபாய் வரை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டது. வண்ணம் பூசிய விநாயகர் சிலைகள், வர்ணம் பூசப்படாத விநாயகர் சிலைகள் என இரு வகைகளில் விநாயகர் சிலை விற்பனையானது. இந்த சிலைகளை பொதுமக்கள் மழையில் குடைபிடித்தபடி இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் வந்து வாங்கிச் சென்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் என செய்து வருகின்றனர்.

விழுப்புரத்தில் மழையிலும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி..


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் விநாயகர் சதுர்த்தியன்று வழக்கத்திற்கு மாறாக பூக்களின் விலை  சற்று குறைந்துள்ளது.  இருமடங்காக விற்ற பூக்கள் தற்போது ஒரு மடங்காக குறைந்துள்ளது.

கடந்த செவ்வாயன்று ஒரு கிலோ முல்லை  650 முதல் 700 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரு கிலோ முல்லை  பூ 400, 380 க்கு  விற்பனையானது. நாட்டு சாமந்தி கடந்த செவ்வாயன்று 300, 250 க்கும் நேற்று 200, 180 ரூபாய்க்கும், நேற்று ரோஜா - 250, 200 ரூபாய்க்கும், துலுக்கு சாமந்தி - 20,30 ரூபாய்க்கும், சம்மங்கி - 260, 220 ரூபாய்கும், அரளி 300 க்கும்,கி லோ குண்டு மல்லி - 400,350 ரூபாய்க்கும்கோழி கொண்டை- 30, 25 க்கும் விற்பனையாகிறது.

விழுப்புரத்தில் மழையிலும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி..


பூக்களின் விலை  குறைந்துள்ளது இருந்தாலும் மழையின் காரணமாக வியாபாரம் மந்தமாக செல்கிறது என வியாபாரிகள் கூறுகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

அடுத்த செய்தி