ஹோம் /விழுப்புரம் /

கால்நடை தொழில் தொடங்க நிதியுதவி - விழுப்புரத்தை சேர்ந்தவரா? நீங்களும் தொழில்முனைவோராகலாம்...

கால்நடை தொழில் தொடங்க நிதியுதவி - விழுப்புரத்தை சேர்ந்தவரா? நீங்களும் தொழில்முனைவோராகலாம்...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Villupuram : விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை தொழில் தொடங்க விருப்புவோர், அதற்னாக நிதியைப் பெற விண்ணப்பிக்கும் வழிறை குறித்து ஆட்சியர் மோகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் கால்நடை தொழில் தொடங்க விரும்புவோருக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பிரதம மந்திரியின் ஆத்மநிர்பார் பாரத் அபியான் (Atmanirbhar Bharat Abhiyaan) தொகுப்பின் கீழ் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் தனிப்பட்ட தொழில் முனைவோர் பயன்பெறலாம்.

அதன்படி, தனியார் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஆகியவை பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டல் உள்கட்டமைப்பு, இறைச்சி பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டல் உள்கட்டமைப்பு, கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், மாட்டினம் மேம்பாட்டு தொழில்நுட்பம் மற்றும் கால்நடை இனப்பெருக்க பண்ணை அமைத்தல், கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்துகள் உற்பத்தி ஆலை அமைத்தல், விலங்கு கழிவுகள் மூலம் மேம்படுத்தப்பட்ட பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில் தொடங்க விண்ணப்பம் செய்து நிதி உதவி பெறலாம்.

பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் திறன், தயாரிப்புகளை பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றை அதிகரிக்க இந்த திட்டம் உதவுகிறது. இதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட பால், இறைச்சி சந்தைக்கு அமைப்புசாரா கிராமப்புற பால் மற்றும் இறைச்சி உற்பத்தியாளர்கள் அதிகளவு பயன்பெற இயலும்.

இதனால் உற்பத்தியாளர்களுக்கு சந்தையில் விலை உயர்வு கிடைக்கும். உள்நாட்டு நுகர்வோர்களுக்கு தரமான பால் மற்றும் இறைச்சி பொருட்கள் கிடைக்கச்செய்யலாம். இந்த திட்டத்தின் மூலம் மாடு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, பன்றி மற்றும் கோழி இனங்களுக்கு தரமான செறிவூட்டப்பட்ட தீவனம் மற்றும் மலிவு விலையில் சமர்ச்சீர் உணவு வழங்க இயலும்.

Must Read : விஜய்சேதுபதி பட சூட்டிங் ஸ்பாட் இதுதானா! - அட இது நம்ம புதுக்கோட்டையில தாங்க இருக்கு!

இதன் மொத்த திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனாக பெறமுடியும். இதில் பயனாளிகள் பங்களிப்பாக சிறு, குறு தொழில்கள் தொடங்க 10 சதவீதம் முதல் 15 சதவீதம் தொகையும், மீதமுள்ள இனங்களில் 25 சதவீதம் பங்குத்தொகையும் அளிக்கப்பட வேண்டும்.

மேலும் 3 சதவீதம் வரை வட்டி குறைப்பிற்கு அனைத்து தொழில்முனைவோரும் தகுதியாவார்கள். எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான தொழில்முனைவோரால் தங்களது விரிவான அறிக்கையை ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர்கள் குறிப்பிடும் வங்கிக்கு கடன் வழங்க பரிந்துரைக்கப்படும். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர், இதர அமைப்புகள், கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்டுள்ள தொழில்கள் தொடங்க நிதி உதவி பெறுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்திட மாவட்ட வேளாண்மை விஞ்ஞானக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகி உரிய ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Business, Local News, Villupuram