விழுப்புரத்தில் வெண்பூசணி, கோவைக்காய், புடலை, பீர்க்கை உள்ளிட்ட காய்கறிகளில் ஜூஸ் செய்து அசத்தும் பழரசக்கடைகள்.
கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மக்கள் பல வகையான பானங்களை அருந்துவது உண்டு. அந்த வகையில் விழுப்புரத்தில் கற்றாழை ஜூஸ்,வெண்பூசணி, கோவைக்காய், புடலை, பீர்க்கை உள்ளிட்ட காய்கறிகளில் ஜூஸ் செய்து அசத்தும் பழரசக் கடைகளில் விற்பனை அமோகமாக நடக்கிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அதிகளவில் குளிர்பானங்கள் மற்றும் நீர் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் ஆலோவேரா (Aloe vera)
என்ற தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழை உடல் சூட்டை தணிக்கும் உணவு மட்டுமல்ல அழகையும் ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாக கொடுக்கும்.
ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான செடி தான் இந்த கற்றாழை. இச்செடியின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் ஜெல், வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனை நீக்க பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். கோடைகால வெயிலை சமாளிக்க, மற்ற குளிர் பானங்கள் குடிப்பதை விட 'கற்றாழை ஜீஸ்' குடித்தால் கூடுதல் ஆரோக்கியம். மருத்துவப் பயன்கள் இதில் அதிகமாக அடங்கியுள்ளதால், மலச்சிக்கல், வயிற்று கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை குறைக்கும் வல்லமை இதற்கு உள்ளது. விலையும் மிக மிகக் குறைவு. அதனால்தான், மக்கள் விரும்பி தேடி வந்து, வாங்கி குடிக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல், வெண்பூசணி ஜூஸ், தூதுவளை ஜூஸ், பீட்ரூட் ஜூஸ்,கேரட் ஜூஸ்,மல்டி ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், வாழைப்பூ ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ், அருகம்புல் ஜூஸ், பீர்க்கங்காய் ஜூஸ், புடலங்காய் ஜூஸ், கோவைக்காய் ஜூஸ் போன்ற பல ஆரோக்கியமான ஜூஸ் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்களும் இதன், மருத்துவ குணங்களை அறிந்ததால் விரும்பி வாங்கி குடித்து வருகின்றனர். தங்களின் ஆரோக்கியத்தையும், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், கற்றாழை ஜூஸ் போன்ற பல இயற்கை மருத்துவ குணமுடைய பழங்கள் காய்கறிகள் ஜூஸை தினமும் காலையில் குடித்து வாருங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram