முகப்பு /விழுப்புரம் /

10 ரூபாய்க்கு கிடைக்கும் ஃப்ரெஷ் ஜூஸ்..! ரங்கநாதன் தெருவை தேடிச்செல்லும் விழுப்புரம் மக்கள்..!

10 ரூபாய்க்கு கிடைக்கும் ஃப்ரெஷ் ஜூஸ்..! ரங்கநாதன் தெருவை தேடிச்செல்லும் விழுப்புரம் மக்கள்..!

X
மாதிரி

மாதிரி படம்

Fresh Juice Available For Rs.10 : 10 ரூபாய், 30 ரூபாய்க்கு ஜில்லென்று பிரஷ் ஜூஸ் விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் விற்பனை செய்யப்படுகிறது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் 10 ரூபாய், 30 ரூபாய்க்கு ஜில்லென்று பிரஷ் ஜூஸ் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் இதனை ஆர்வத்துடன் வாங்கி குடிக்கின்றனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காலையில் அதிக உஷ்ணமும், இரவில் புழுக்கமும் தாங்க முடியாமல் மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

10 ரூபாய்க்கு கிடைக்கும் ஃப்ரெஷ் ஜூஸ்

இந்த உஷ்ணத்தில் இருந்து காத்துக்கொள்ள அதிக அளவில் பழங்களைக் கொண்டு செய்ப்படும் ஃப்ரெஷ் ஜூஸ்களை அதிகளவில் குடிப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் . இதேபோல் கோடை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி குடிக்கும் ஃப்ரெஷ் ஜூஸ் பொதுவாக, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் உள்ள தள்ளுவண்டி ஜூஸ் கடையில் தர்பூசணி ஜூஸ் 10 ரூபாய்க்கும், முலாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, செவ்வாழை, மாதுளை ஆகிய ஜூஸ்கள் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு குறைந்த விலையில் ஃப்ரஷ் ஜூஸ்கள் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த கடைக்கு வருகை புரிகின்றனர்.

மேலும் இங்கு, குறைந்த விலையில் ஜூஸ் வகைகள் கிடைப்பது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Soft Drinks, Villupuram