ஹோம் /விழுப்புரம் /

செல்ல பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி.. விழுப்புரத்தில் சிறப்பு முகாம்

செல்ல பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி.. விழுப்புரத்தில் சிறப்பு முகாம்

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram - World Rabies Day 2022 | விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் உலக வெறிநோய் தடுப்பு தினமான  செப்டம்பர் 28-ல் விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தினர்.

வெறிநாய்கள் கடிப்பதால் ஏற்படும் ‘ரேபிஸ்’ நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை பாதுகாத்திடும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ம் தேதியன்று உலக வெறிநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வெறிநாய் கடிக்கான மருந்தை முதலில் கண்டுபிடித்த நுண்ணுயிரியலின் தந்தை லூயி பாஸ்டர் நினைவு தினத்தை கொண்டாடும் விதமாக உலக ரேபீஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:  இலவச பயிற்சி அளிக்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமி..  அசத்தும் விழுப்புரம் இளைஞர்கள்

இவரது நினைவு தினத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது இதனை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி பூங்காவில், மாவட்ட கால்நடை பராமரிப்பு மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து உலக வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தினர்.

இந்த தடுப்பூசி முகாமில் விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை கொண்டுவந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த தடுப்பூசி முகாமில் 50க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க:  மானியத்துடன் காளான் வளர்ப்பு.. வீட்டிலிருந்தே மாதம் ரூ.50,000 வருமானம்.. விழுப்புரம் நபரின் அசத்தல் பிசினஸ்..

இத்தடுப்பூசி முகாம் குறித்து கால்நடை பராமரிப்புத் துறையின் விழுப்புரம் மண்டல இணை இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) தாமு சாந்தி கூறியதாவது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 28ஆம் தேதி உலக வெறிநோய் தடுப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த தினத்தில் பல்வேறு பகுதிகளில், கால்நடை முகாம், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் வீட்டிலுள்ள நபர்கள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் நல்லது என கூறினார்..

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram