முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்! மறக்காம போங்க!

விழுப்புரத்தில் செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்! மறக்காம போங்க!

X
செல்ல

செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

Viluppuram vaccine | விழுப்புரம் மாவட்டம் மகாராஜபுரத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டம் மகாராஜபுரத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெறும் செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் பழனி துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவிக்கையில்,மனித சமுதாயம் இன்று எதிர்கொள்கிற பயங்கர நோய்களில் ஒன்று வெறிநோய் ஒன்றாகும். வெறிநோய் பொதுவாக நாய் குடும்பத்தை சார்ந்த விலங்குகள் வாயிலாக பரவுகின்றது. நாய் குடும்பம் என்று சொல்லும்போது காட்டு விலங்குகளான செந்நாய்,ஓநாய்,நரி போன்ற விலங்குகளும் அடங்கும்.

மேலும் நாய்க்கடி மட்டுமின்றி வெறிநோய் கண்ட பூனையின் கீறலின் மூலமும் வெறிநொய் பரவ வாய்ப்புள்ளது. இந்நோயானது Rhaboviridas குடும்பத்தை சார்ந்த Lysaa virus கிருமி மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்கினத்தின் உமிழ்நீரில் இந்நோய்க்கிருமி இருக்கும். காயம்பட்ட இடத்தில் இந்த உமிழ்நீர் படும்போது மற்றும் பாதிக்கப்பட்ட நாய்கள் கடிப்பதன் மூலம் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நச்சுரியானது உமிழ்நீருடன் வெளியேறி ஏறத்தாழ அரைமணி நேரம் மட்டும் உயிருடன் இருக்கும்.

வெறிநோய்க்கு எதிரான தடுப்பூசி போடுவதன் மூலம், நாம் வெறிநோய் பரவலை தடுக்கலாம். செல்லப்பிராணிகளுக்கு முதல் தடுப்பூசி 3 மாத வயதிற்குள்ளும், பூஸ்டர் தடுப்பூசி 21 நாள் கழித்தும், அடுத்த தடுப்பூசி வருடம் ஒரு முறை செலுத்த வேண்டும்.

செல்லப்பிராணிகளை வளர்ப்போர் வருடந்தோறும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திட வேண்டும். செல்லப்பிராணிகளை சுதந்திரமாகச் தெருக்களில் திரிய விடக்கூடாது, குறிப்பாக மனிதர்களுக்கு நாய் கடித்த பின்பு முதல் ஊசிக்கு பிறகு 3,7, 14 மற்றும் 28 நாட்களில் கட்டாயம் வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

எனவே செல்லப்பிராணிகளை வளர்ப்போர் கால்நடை மருத்துவரின் அறிவுரையின்படி அவ்வப்பொழுது வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய்க்கான தடுப்பூசி செலுத்தி வெறிநோயினால் ஏற்படும் உயிரிழப்பினை தடுத்திட உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Vaccination, Villupuram, Viluppuram S22p13