Home /viluppuram /

இலவச மிதிவண்டிகள் கிடைத்த சந்தோஷத்தில் விழுப்புரம் பள்ளி மாணவர்கள்..

இலவச மிதிவண்டிகள் கிடைத்த சந்தோஷத்தில் விழுப்புரம் பள்ளி மாணவர்கள்..

இலவச

இலவச மிதிவண்டிகளை பெற்ற சந்தோஷத்தில் மாணவியர்

Villupuram District News | விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இன்று இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. இலவச மிதிவண்டி பெற்றுக்கொண்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு  இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது.  மிதிவண்டிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழக அரசாங்கம் மாணவர்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இலவச மடிக்கணினி, இலவச மிதிவண்டி, மாணவர்களுக்கான பை, செருப்பு, யூனிபார்ம், உணவு என மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவி புரிந்து வருகிறது தமிழக அரசு. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், விழுப்புரம்  அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் , நான்கு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு  இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன .

அரசு மேல்நிலைப்பள்ளி கீழ்பெரும்பாக்கம் பள்ளியை சேர்ந்த 233 மாணவர்களுக்கும் , நகராட்சி மேல்நிலைப்பள்ளி (பிஎன் தோப்பு) சேர்ந்த 341 மாணவர்களுக்கும் ,  காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 380 மாணவர்களுக்கும் , அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 940 மாணவர்கள் என விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 1,894 மாணவர்களுக்கு   ரூபாய் 96 லட்சம் மதிப்புபீட்டில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இலவச மிதிவண்டிகளை பெற்ற சந்தோஷத்தில் மாணவியர்


இலவச மிதிவண்டி பெற்றுக் கொண்ட மாணவர்கள் கூறியதாவது :

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. தற்போது தமிழக அரசாங்கம் இலவச மிதிவண்டிகளை வழங்கி வருகிறது.  இத்தனை நாட்கள் காத்திருந்து இலவச மிதிவண்டியை பெற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மிதிவண்டி இருந்தால் காலை வகுப்புக்கு சீக்கிரமாக வந்து விடுவோம். மாலை வீடுகளுக்கு செல்லும்போது பேருந்தை தவறவிட்டால், மிதிவண்டி மூலம் வீட்டிற்கு செல்லலாம். எனவே இந்த இலவச மிதிவண்டி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாணவர்கள் சைக்கிளில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் என  பள்ளிக்கல்வித்துறை சார்ப்பில் அறிவுரை வழங்கப்பட்டது.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி