ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்புகள்!

விழுப்புரத்தில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வகுப்புகள்!

X
விழுப்புரம்

விழுப்புரம் அழகுகலை பயிற்சி மையம்

Viluppuram விழுப்புரத்திலிருந்து மாம்பழப்பட்டு செல்லும் சாலை அருகே அமைந்துள்ள அலமேலுபுரத்தில் இலவசமாக பெண்களுக்கான அழகு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரத்திலிருந்து மாம்பழப்பட்டு செல்லும் சாலை அருகே அமைந்துள்ள அலமேலுபுரத்தில் இந்தியன் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம். இப்பயிற்சி நிறுவனத்தின் மூலம் இலவசமாக பெண்களுக்கான அழகு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) நாடு முழுவதும் உள்ள முன்னணி வங்கிகளால் அந்தந்த மாவட்ட அளவில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் நோக்கம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதே ஆகும்.இளைஞர்களை சுயதொழில் தொடங்க ஊக்குவித்து, அவர்களுக்கு தேவையான நிதி உதவியும் மற்றும் சிறுதொழில் பயிற்சி ஆகியவற்றை வழங்குவதே ஆகும். இந்த பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு தொழில் தொடங்க இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,தற்போது பெண்களுக்கான அழகு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பு 30 நாட்கள் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் ஆர்வம் உள்ள நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பயிற்சி வகுப்பில் மொத்தம் 35 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு வெளியில் இருந்து பயிற்றுநர்கள் வருகைபுரிந்து, மாணவர்களுக்கு பல அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள். மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் செயல்முறை விளக்கமாக, பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதாவது இங்கு பயிற்சிக்கு வந்த மாணவர்களில் ஒருவரை அழைத்து மேக்கப் போட்டு செயல்முறை பயிற்சி அளிக்கின்றனர்.

“இது போன்ற செயல் விளக்கங்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது” என பயிற்சிக்கு வந்த மாணவர்கள் கூறினர்.

மேலும் இந்த பயிற்சி வகுப்பு மூலம் தொழில் தொடங்குவதற்கான லோன் வசதி போன்றவையும் செய்து தரப்படுவதால், மாணவர்கள் ஆர்வமாக வந்து கலந்து கொள்கின்றனர். இந்த பயிற்சி வகுப்பிற்கு மகளிர் சுய உதவி குழு மூலமாகவும் உறுப்பினர்கள் வருகை புரிகிறார்கள்.

First published:

Tags: Beauty parlour, Local News, Villupuram