முகப்பு /செய்தி /விழுப்புரம் / பதிலளித்துவிட்டுதான் செல்லவேண்டும்... பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் டிஜிபியிடம் நீதிமன்றம் விசாரணை

பதிலளித்துவிட்டுதான் செல்லவேண்டும்... பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் டிஜிபியிடம் நீதிமன்றம் விசாரணை

விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம் நீதிமன்றம்

இரு அதிகாரிகளிடம் இரவு வரை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

  • Last Updated :
  • Viluppuram, India

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபியிடம் விழுப்புரம் நீதிமன்றத்தில் இரவு 8 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, சிறப்பு டிஜிபியாக இருந்தவர் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக, பெண் எஸ்.பி புகார் தெரிவித்தார். பெண் எஸ்.பி.யை புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பியாக இருந்தவர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் புகாருக்குள்ளான இரு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருவர் மீதும் விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இரு அதிகாரிகளும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான நிலையில், இருவரிடமும் கேள்விகள் கேட்டு அவர்கள் அளிக்கும் பதில்கள் பதிவு செய்யப்பட்டன.

Also Read : தீ தடுப்பு செயல்முறை விளக்கம்.. விழுப்புரத்தில் தீயணைப்பு வீரர்கள் அசத்தல்!

பாதி கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் நீதிமன்ற நேரம் முடிவடைவதைச் சுட்டிக்காட்டி கால அவகாசம் வேண்டும் என இருவரும் முறையிட்டனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி புஷ்பாராணி, நள்ளிரவு நேரம் ஆனாலும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டுதான் செல்ல வேண்டும் எனக் கூறி கேள்விகளைத் தொடர்ந்தார்.

top videos

    இதனால் விசாரணை இரவு 8 மணி வரை நீடித்தது. கேள்விகள் அனைத்தும் கேட்டு முடிக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    First published:

    Tags: Sexual harassment, Villupuram