ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்... மூழ்கிய தரைப்பாலம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

விழுப்புரத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்... மூழ்கிய தரைப்பாலம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

Villupuram flood | கன மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பில்லூர்- சேர்ந்தனூர் இடையே உள்ள தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் சில நாட்களாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆறு, மலட்டாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் பெருகெடுத்து ஒடுகிறது.

மலட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரானது விழுப்புரம் மாவட்டம் பில்லூர்- சேர்ந்தனூர் இடையே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்துள்ளது. அங்கே, தரைப்பாலத்திற்கு மேலே 2 அடி உயரத்திற்கும்அதிகமாக தண்ணீர் செல்கிறது. இதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

இதனால் பில்லூர், தென்மங்கலம், அரசமங்கலம், ஆனாங்கூர், பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதி மக்கள் அத்தியாவசிய தேவை மற்றும் வேலைக்கு செல்ல வெகுதூரம் சுற்றிக்கொண்டு, விழுப்புரம் வந்து பின்னர் அங்கிருந்து பண்ருட்டிக்கு செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் அதிகளவில் செல்வதால், யாரும் தண்ணீரில் இறங்க வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கருதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் தாலுகா போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Published by:Suresh V
First published:

Tags: Flood, Flood warning, Local News, Villupuram