ஹோம் /விழுப்புரம் /

முதல் ரேங்க் எடுத்த +2 மாணவியை ஒரு நாள் தலைமை ஆசிரியராக ஆக்கி அழகு பார்த்த விழுப்புரம் அரசு பள்ளி நிர்வாகம்..!!

முதல் ரேங்க் எடுத்த +2 மாணவியை ஒரு நாள் தலைமை ஆசிரியராக ஆக்கி அழகு பார்த்த விழுப்புரம் அரசு பள்ளி நிர்வாகம்..!!

villupuram

villupuram - ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியர்

One Day Head Master | விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சசிகலா, பள்ளியில் படிக்கும் மாணவிகள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவிக்கு ஒருநாள் முதல்வர் போல ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று செயல்பட வாய்ப்பு வழங்க என முடிவெடுத்து அதனை செயல்படுத்தி உள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தால், ஒரு நாள் முதல்வரைப் போல ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று செயல்படலாம் என ஆசிரியர்கள் முடிவு எடுத்து அதன்படி செயல்படுத்தி  காட்டியுள்ளனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் பல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது பள்ளிக்கல்வித்துறை. அதில் ஒரு பகுதியாக பள்ளி மேலாண்மை குழு அமைத்து மாணவர்களுக்கு எளிய முறையில் நடனம், பாடல், நாடகம் போன்றவற்றை மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஆசிரியர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சசிகலா, பள்ளியில் படிக்கும் மாணவிகள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவிக்கு ஒருநாள் முதல்வர் போல ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று செயல்பட வாய்ப்பு வழங்க என முடிவெடுத்து அதனை செயல்படுத்தி உள்ளார். இச்செயல் மாணவிகள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:  10 தலைகளுடன் ராவணன்... வியக்கவைக்கும் புதுக்கோட்டை குடுமியான்மலை சிற்பங்களின் புகைப்பட தொகுப்பு!

முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒருநாள் முதல்வராக பணியாற்றி பல செயல்களை செய்து முடிப்பார். ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்த ராட்சசி திரைப்படத்தில், முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்கலாம் என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த காட்சிகள் பொதுமக்களிடம், மாணவர்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அது ரீலாக இருந்தாலும் ரியல் லைஃபில் இது சாத்தியமா என பலரது மத்தியில் கேள்வி எழுந்தது.

ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியர்

அதனை சாத்தியப்படுத்தும் விதமாக விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் லோகிதா என்ற மாணவி காலாண்டுத் தேர்வில் 600 க்கு 581 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். ஒரு நாள் தலைமை ஆசிரியராக பதவியேற்ற மாணவி லோகிதா, இன்று ஒரு நாள் பள்ளி வளாகத்தில் நடைபெறும் அனைத்து செயல்களையும் கவனித்து ஒரு முழு தலைமை ஆசிரியை எப்படி பணியாற்றுவார் என்பது போன்று பணியாற்றினார்.

மேலும் படிக்க:  காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

பள்ளி வளாகத்தின் தூய்மை, மாணவர்களின் கோரிக்கை அனைத்தும் கேட்டறிந்தார். ஒரு நாள் தலைமை ஆசிரியர் பணி அனுபவம் எப்படி இருந்தது என்று லோகிதா நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், ’படத்தில் தான் இது போன்ற காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் உண்மையாக இந்தச் சம்பவம் எனக்கு ஆச்சரியத்தையும், புதிய அனுபவத்தையும் தந்தது. ஒரு தலைமை ஆசிரியர் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எதையெல்லாம் செய்ய வேண்டும், மாணவர்களை எப்படி வழி நடத்த வேண்டும் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். தலைமை ஆசிரியராக நான் இருந்தது மற்ற மாணவிகளின் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன் என பெருமையுடன் கூறினார் ஒரு நாள் தலைமை ஆசிரியர் லோகிதா.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒரு நாள் தலைமை ஆசிரியர் செயல் மற்ற மாணவர்களின் மத்தியில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமையும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கூறினர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram