முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் புத்தக திருவிழாவில் களைகட்டும் கலை நிகழ்ச்சிகள் - கடவுள் வேடமணிந்து கலக்கிய கலைஞர்கள்

விழுப்புரம் புத்தக திருவிழாவில் களைகட்டும் கலை நிகழ்ச்சிகள் - கடவுள் வேடமணிந்து கலக்கிய கலைஞர்கள்

X
விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Book Fair | விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் மட்டுமல்லாது மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகியவையும் நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில், முதன் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள நகராட்சி திடலில் மார்ச் 25ம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. இதில், கடவுள் போல வேடமிட்டு வந்த கலைஞர்கள் நடனமாடி பொதுமக்களை உற்சாகப்படுத்தினர்.

விழுப்புரத்தில், இதுவரை புத்தகத் திருவிழா நடைபெறாத நிலையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் மட்டுமல்லாது மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகியவையும் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை திருவிழாவில் வாங்கி செல்கின்றனர்.

கடவுள் போல வேடம் அணிந்து நடனமாடிய கலைஞர்கள்

மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில், கடவுள்களை போல வேடம் அணிந்து வந்த கலைஞர்கள், நடனமாடி பொதுமக்களை உற்சாகப்படுத்தினர். இந்த புத்தக திருவிழாவானது வரும் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Villupuram