ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் தீயணைப்பு துறையினர் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை

விழுப்புரத்தில் தீயணைப்பு துறையினர் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை

பேரிடர்

பேரிடர் மீட்பு ஒத்திகை

Viluppuram | விழுப்புரம் நகராட்சி அம்மா பூந்தோட்டம் குளம் பகுதியில், தீயணைப்புத் துறை சார்பாக,  வடகிழக்கு பருவமழை பேரிடர் காலங்களில்,  மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை உடனடியா எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் நகராட்சி அம்மா பூந்தோட்டம் குளம் பகுதியில், தீயணைப்புத் துறை சார்பாக, வடகிழக்கு பருவமழை பேரிடர் காலங்களில், மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை உடனடியா எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1ம் தேதி முதல் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை ஒருவாரம் தாமதமாக தொடங்கியுள்ளது. இருப்பினும், இயல்பைவிட அதிகம் மழை பெய்து வருகிறது.

விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதுபோன்ற பருவமழை காலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்து விடுகிறார்கள்.

இதையும் படிங்க : தேவார பாடல் பெற்ற கடைசி சிவன் தலம் - விழுப்புரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா.!

இளைஞர்கள் சிறுவர்கள் ஆற்றில் விளையாடலாம் என்று நினைத்துக் கொண்டு ஆபத்தை உணராமல், சில காரியங்கள் செய்கிறார்கள்.இதனால், சிறுவர்கள் விளையாட உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். இவர்களில் பத்திரமாக மீட்பது எப்படி என்பது குறித்த விளக்கங்கள், ஒத்திகை நிகழ்ச்சியாக தீயணைப்புத்துறை வீரர்கள் பொதுமக்கள் செய்து காட்டினர்.

வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்கள், நீச்சல் தெரியாமல் ஆற்றில் தவறி விழுந்தவர்கள், பருவமழை காலத்தில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றி அவர்களை எப்படி மீட்டு அவர்களுக்கு முதல் உதவி செய்ய வேண்டும் என்பது குறித்த பல விஷயங்களை செய்து காட்டினர்.

இதையும் படிங்க : தமிழர் கட்டிடக்கலை வரலாற்றில் திருப்புமுனை... மண்டகப்பட்டு கோவில்! - இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!

வீட்டில் பயன்படுத்தும் சில பொருட்களை கொண்டு, வீட்டில் வளரக்கூடிய வாழை மரம், தண்ணீர் குடங்கள், வாட்டர் பாட்டில்கள், ஏணி, பரிசல், ஆகியன பயன் படுத்தி ஆபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் அச்சு அசலாக செய்து காட்டினர்.

அதுமட்டுமல்லாமல் காப்பாற்றப்பட்ட நபர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும். முதலில் காப்பாற்றிய நபருக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும், அதன்பின் இரு கைகளை வைத்து நெஞ்சில் அழுத்தம் தர வேண்டும். அதன் பின்பும் காப்பாற்றப்பட நபர் விழிக்கவில்லை என்றால் வாயுடன் வாய் வைத்து ஊத வேண்டும். இது போன்ற பல மருத்துவ முறைகளும் செய்து காட்டினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் இளைஞர்கள்,, கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை பார்த்து பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Vizhupuram