ஹோம் /விழுப்புரம் /

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் கூறும் வழிமுறைகள்.. விபத்து ஏற்பட்டால் யாரை தொடர்புகொள்வது?

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் கூறும் வழிமுறைகள்.. விபத்து ஏற்பட்டால் யாரை தொடர்புகொள்வது?

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Fire Department | விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினர் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக  'விழிப்புடன் கொண்டாடுவோம் விபத்தில்லா தீபாவளியை...' என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் பொதுமக்களுக்கு தீபாவளியின் போது எது செய்ய வேண்டும் எது செய்யக் கூடாது என விழிப்புணர்வு அடங்கிய நோட்டீஸ் வழங்கினார்கள்.

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று  தீபாவளி. தீபாவளி என்றாலே எண்ணெய் குளியல், பட்டாசு, புத்தாடைகள், பலகாரம் போன்றவை தான் பொதுமக்களுக்கு ஞாபகம் வரும். புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.  புதுமணத் தம்பதிகள்   தலைதீபாவளியை குடும்பதினரோடு உற்சாகமாக கொண்டாடி மகிழ்வர். சிறுவர்கள் வீட்டு வாசல்களில், அக்கம்பக்கத்தினருடன் பட்டாசுகளை வெடித்து தங்களது அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி குடும்பத்தோடு கோயில்களுக்கும் சென்று பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகையொட்டி பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் செல்வார்கள் என்பதால் காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகள் வெடிக்கும் போது  நாம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

பட்டாசுகளை வெடிக்கும் போது செய்ய வேண்டியவை,:

பெரியவர்கள் கண்காணிப்பில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்

நீண்ட ஊதுபத்தி உபயோகித்து பக்கவாட்டில் நின்று பட்டாசு கொளுத்த வேண்டும்

வீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

நைலான் மற்றும் பட்டு உடைகளைத் தவிர்த்து பருத்தியிலான இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் குளிர்ந்த நீரை ஊற்றுங்கள் உடனே மருத்துவரை நாடுங்கள்.

மேலும் படிக்க: திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட், சிறந்த பொழுதுபோக்கு இடம் இப்ராஹிம் பூங்கா - அழகும் சிறப்பும்!

ஆடையில் தீப்பற்றினால் தரையில் படுத்து உருள வேண்டும் என பல விழிப்புணர்வு கூறியுள்ளனர்.

பட்டாசு வெடிக்கும் போது செய்ய கூடாதவை :

பட்ட செல்லிக்கு ஒருத்தி மேலே தூக்கி எறிந்து விளையாடக்கூடாது

பட்டாசு மீது தகர டப்பாக்களில் போட்டு மூடி வேடிக்கை பார்க்கக் கூடாது.

குடிசைப்பகுதி மருத்துவமனை மற்றும் பெட்ரோல் பங்க் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது

ஈரமுள்ள பட்டாசுகளை அடுப்பின் அருகில் வைத்து உலர்த்த கூடாது

தீப்பற்ற வைத்தும் வெடிக்காத நிலையில் இருக்கும் வெடிகளை குனிந்து பார்ப்பதும் கையால் தொடவும் கூடாது

வெடிக்காத வெடிகளை எல்லாம் கும்பலாக ஒரே இடத்தில் குவித்து வைத்து பற்ற வைக்க கூடாது.

மேலும் படிக்க: தமிழர் கட்டிடக்கலை வரலாற்றில் திருப்புமுனை... மண்டகப்பட்டு கோவில்! - இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!

கைகளில் வெடிகளை வைத்து வெடிக்க கூடாது

இது போன்று பல விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு மைக் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

செய்யக்கூடாதவை நிச்சயமாக பின்பற்றினால் விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாட முடியும் என தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் எதிர்பாராதவிதமாக விபத்துக்கள் ஏற்படுமனால், தொடர்பு கொள்ள வேண்டிய தீ கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 101, 102, 04146-222199,9445086489 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Villupuram