Home /viluppuram /

வேளாண்மை படித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதி உதவி- விண்ணப்பிப்பது எப்படி?

வேளாண்மை படித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதி உதவி- விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார். செப்டம்பர்  30ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் 2022-23-ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

    வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு வேளாண் பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 12 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதி உதவி பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

    பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் பயனடைந்த தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டும் 25 சதவீத மானியமாக அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம்.

    இத்திட்டத்தில் பயன்பெற 21 முதல் 40 வயதுடைய வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்தவராகவும், கணினித்திறன் பெற்றவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும்.

    குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதியுடையவர் ஆவார். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோரது நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாகவும், ஆவணங்களான 10 மற்றம் 12-ம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்புக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணங்களுடன் வேளாண்மைத்துறை அக்ரிஸ்நெட் இணையதளத்தில் 30.9.2022-க்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

    மேலும், விவரங்களுக்கு வேளாண் இணை இயக்குனர், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி