ஹோம் /விழுப்புரம் /

ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் இனி பெண் மாஸ்டர்கள் தான்... விழுப்புரத்தில் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபடும் பெண்கள்..

ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் இனி பெண் மாஸ்டர்கள் தான்... விழுப்புரத்தில் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபடும் பெண்கள்..

X
பயிற்சி

பயிற்சி பெறும் பெண்கள்

Villuppuram District News : விழுப்புரம் மாவட்டத்தில் இந்தியன் வங்கி உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்களுக்கு துரித உணவு சமைக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது ஆண்களை விட பெண்கள் இதில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் இந்தியன் வங்கி உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்களுக்கு துரித உணவு சமைக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது ஆண்களை விட பெண்கள் இதில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) நாடு முழுவதும் உள்ள முன்னணி வங்கிகளால் அந்தந்த மாவட்ட அளவில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் நோக்கம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதே ஆகும்.

இளைஞர்களை சுயதொழில் தொடங்க ஊக்குவித்து, அவர்களுக்கு தேவையான நிதி உதவியும் மற்றும் சிறுதொழில் பயிற்சி ஆகியவற்றை வழங்குவதே ஆகும்.இந்த பயிற்சி நிறுவனத்தில் பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

சணல் பை தயாரிப்பது,அலங்கார பொருட்கள் தயாரிப்பது, கைவினைப் பொருட்கள் தயாரிப்பது, கால்நடை வளர்ப்புக்கான பயிற்சி அளித்தல், மொபைல் போன் பழுது பார்த்தல், போட்டோகிராபி, துரித உணவுகளை தயாரிப்பது போன்ற பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Cyclone Mandous | மாண்டஸ் புயல் எதிரொலி... விழுப்புரத்தில் நாளை இரவு அரசு பேருந்துகள் இயங்காது.. 

இந்நிலையில், தற்போது துரித உணவுகளை (FAST FOOD) தயாரிக்கும் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.

இதில் விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயிற்சி பெறுவதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்த பயிற்சி 6 மாதங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

மேலும் இந்த பயிற்சி வகுப்புகளை பற்றி பயிற்சியாளரான ரூபனிடம் கேட்டபோது, ”தற்போது துரித உணவு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் 36 பேர் விண்ணப்பித்து பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் 25 பேர் பெண்கள் ஆவார்கள். எப்போதுமே துரித உணவு கடைகளில் ஆண்களை மட்டுமே காண இயலும். ஆனால் இப்போது இதில் பெண்களும் இனி காண இயலும்.

ஆண்களை விட உணவு தயாரிப்பதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், மஷ்ரூம் ப்ரை, மஷ்ரூம் கிரேவி, கராச்சி அல்வா போன்ற 10-க்கும் மேற்பட்ட வகையான உணவு வகைகள் தயாரிப்பதற்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

காலையில் தியரி வகுப்புகளும், மாலையில் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் முடித்து செல்லும்போது நிச்சயமாக ஒரு சிறிய ஹோட்டல் திறக்கும் அளவிற்கு தன்னம்பிக்கையும், நிதி உதவியும் அவர்களுக்கு கொடுத்து அவர்களை தொழில் முனைவோர் ஆக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம்” என கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற நபர்கள் அனைவரும் இந்த பயிற்சி வகுப்பு தங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும், நிச்சயமாக ஒரு சிறிய ஹோட்டல் ஆவது விரைவில் திறப்போம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Vizhupuram