முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் விவசாயிகளே.. பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் பெறனுமா.. உடனே இதை செய்யுங்க!

விழுப்புரம் விவசாயிகளே.. பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் பெறனுமா.. உடனே இதை செய்யுங்க!

மாதிரி படம்

மாதிரி படம்

Viluppuram | இந்த ஆண்டு கிசான் நிதியுதவி பெற வேண்டும் எனில் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மாவட்ட  ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு கிசான் நிதியுதவி பெற வேண்டும் எனில் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ், நிலம் உள்ள விவசாயிகள், வேளாண் இடு பொருட்களை வாங்கும் வகையில், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000/- வீதம், ஆண்டுக்கு ரூ.6000/- ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் விவரங்களை சரி செய்தால் மட்டுமே, திட்டத்தின் 13 வது தவணை தொகையை பெற முடியும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், பயன்பெறும் விவசாயிகள்எண்ணிக்கையில் 33000 விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமல் உள்ளனர்.

பி.எம்.கிசான் நிதி திட்டத்தில் பயன் பெற்று வரும் விவசாயிகள், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை ஏற்கனவே இணைத்துள்ளவர்கள், www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் ஆதார் எண் விவரத்தை உள்ளீடு செய்தால், ஒடிபி எண் தங்களது செல்போனுக்கு அனுப்பப்படும். அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

ALSO READ | விழுப்புரம் மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு

இதுநாள் வரை ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று விரல் ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் திட்ட இணையதளத்தில் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம். விவசாயிகள் தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூலமும், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் வேளாண்மை உதவி இயக்குநர்கள் அனைத்து கிராமங்களிலும் இது குறித்து சிறப்பு முகாம் நடத்தி கொண்டு வருவதால் அனைத்து விவசாயிகளும் நாளைக்குள் இதை செய்திட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Agriculture, Farmers, Local News, PM Kisan, Viluppuram S22p13