ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் கரும்புகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்

விழுப்புரத்தில் கரும்புகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்

X
விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  கரும்புடன்  விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரும்புடன் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், குச்சிபாளையம், நத்தமேடு அத்தியூர், மரகதபுரம், ஏமப்பூர், திருப்பச்சாவடிமேடு, நாயனூர் அரசங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 150 ஏக்கருக்கு அதிகமாக விவசாயிகள் பன்னீர் கரும்பு பயிர் செய்துள்ளனர்.

கடந்த முறையை போலவே இந்த ஆண்டும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பன்னீர் கரும்பை பயிரிட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த முறை கரும்பு, பச்சரிசி, பாசிபருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், மஞ்சள் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, ரவை, கோதுமை மற்றும் மஞ்சப்பை என 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த பொங்கலை போலவே குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவது குறித்து அரசு அறிவிக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பொங்கல் பரிசுடன் கரும்பும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக கரும்புடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே, ஜனவரி 2 ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ள பரிசுத் தொகுப்பில் கரும்பை அரசு சேர்க்க வேண்டும், அதற்காக தமிழக அரசு விவாசயிகளிடமிருந்து நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு விழுப்புரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கருப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

செய்தியாளர்: பூஜா, விழுப்புரம்.

First published:

Tags: Local News, Viluppuram S22p13