ஹோம் /விழுப்புரம் /

விரக்தியில் 17 டன் வெங்காயத்தை கீழே கொட்டிய விழுப்புரம் விவசாயி.. உரிய விலை கிடைக்காததால் சோக முடிவு..!

விரக்தியில் 17 டன் வெங்காயத்தை கீழே கொட்டிய விழுப்புரம் விவசாயி.. உரிய விலை கிடைக்காததால் சோக முடிவு..!

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram District News | விழுப்புரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், உரிய விலை கிடைக்காத விரக்தியில்  அறுவடை செய்த 17 டன் வெங்காயத்தை கீழே கொட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரத்தில் இருந்து மாம்பழப்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது கல்பட்டு. இக்கிராமத்தை சேர்ந்த விவசாயியான சங்கர் (வயது57) கடந்த ஆண்டு தனது வயலில் சின்ன வெங்காயத்தை அதிக நிலப்பரப்பில் பயிட்டுள்ளார். முதல் முறை அறுவடைக்கு வெங்காயம் தயாரான போது, விழுப்புரத்தில் கனமழை பெய்த காரணத்தால் வெங்காய தோட்டத்தில் வெள்ளம் சூழ்ந்து நஷ்டம் ஏற்பட்டது.

அதன் பிறகு இரண்டாவது முறையாக நல்ல லாபம் தரும் எண்ணி சங்கர் இரண்டு ஏக்கர் நிலத்தில் மீண்டும் சின்ன வெங்காயத்தை நம்பிக்கையுடன் பயிரிட முடிவு செய்து பெரம்பலூரில் இருந்து ஒன்றரை டன் வெங்காயத்தை கொண்டுவந்து இங்கு நடவு செய்து பயிர் செய்தார்.

லட்சக்கணக்கில் முதலீடு, பராமரிப்பு பணிகள் செய்த சங்கருக்கு இந்த முறை டன் கணக்கில் நல்ல விளைச்சல் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியுடன் அவற்றை சாகுபடி செய்து விழுப்புரம் சந்தைக்கு கொண்டு சென்றிருக்கிறார். சந்தையில் சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காத நிலையில் கிலோ 5 ரூபாய்க்கு விலை கேட்கப்பட்டதால் சங்கர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

மேலும் படிக்க:  விழுப்புரம் மாவட்டத்தில் இத்தனை சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளதா..!

இந்த விலைக்கு விற்றால் தான் போட்ட முதல் கூட கிடைக்காது என்ற நிலையில் என்ன செய்வதென புரியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று இது தொடர்பாக தனக்கு உதவி செய்ய வேண்டுமென மனுவும் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து விவசாயி சங்கரிடம் பேசினோம்..

நான் 20 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறேன். தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடுவதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம். அதுபோல கடந்த வருடம் சின்ன வெங்காயம் பயிர் செய்து இருந்தேன் அப்பொழுது விழுப்புரத்தில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம் அனைத்தும் வீணாகியது.

இதையும் படிங்க ; விழுப்புரம் விவசாயிகளே.. இந்த பயிர்களுக்கு 40%  மானியம் தராங்க..

அதன் பிறகு இரண்டாவது முறையாக அதே சின்ன வெங்காயத்தை மீண்டும் பயிரிட்டேன். இந்த முறை நல்ல விளைச்சல் கிடைத்தது. ஆனால் சந்தையில் தான் விலை போகவில்லை. நல்ல முதலீடு போட்டு விளைந்த வெங்காயத்தை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் அங்கு வியாபாரிகள் மட்டமான விலைக்கு வாங்குகிறார்கள், ஒரு கிலோ 50, 60 ரூபாய்க்கு எடுத்துக் கொண்டால் கூட பரவாயில்லை ஆனால் கிலோ 5 ரூபாய்க்கு வெங்காயத்தை கேட்டவுடன் நான் மிகவும் மனம் நொந்து விட்டேன். என்னுடைய நிலத்தில் 2 ஏக்கரில் 17 டன் வெங்காயம் விளைந்துள்ளது.

நல்ல விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காதது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது என கவலையுடன் தெரிவித்தார் சங்கர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவர் உரிய விலைக்கு போகாததால் 17 டன் வெங்காயத்தையும் தன்னுடைய வயல் வெளியில் உள்ள பண்ணை அருகே கீழே கொட்டியுள்ளார். இதனை தோட்டக்கலைத் துறையினர் வந்து பார்த்ததோடு சரி, இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும், நஷ்ட ஈடு போன்ற உதவியும் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார் விவசாயி.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram