Home /viluppuram /

இப்படி விவசாயம் செய்தால் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பாதிக்கலாம்.. இயற்கை விவசாயி சோமுவின் அசத்தல் ஃபார்முலா..

இப்படி விவசாயம் செய்தால் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பாதிக்கலாம்.. இயற்கை விவசாயி சோமுவின் அசத்தல் ஃபார்முலா..

A

A farmer can earn up to Rs. 4 lakhs through weed cultivation

Organic Farming in Villupuram : இயற்கை விவசாய முறையில், பிரதான பயிர்களுடன் ஊடு பயிர்களையும் மேற்கொண்டால் நிச்சயமாக வெற்றி காண முடியும் என்கிறார் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சோமு.

    விழுப்புரம் மாவட்டம் மதகடிப்பட்டு அடுத்த சிலுக்காரிப்பாளையம், சீனிவசபுரம் குமளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயியான சோமு.  36 வருடங்களாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர் 1986-ல் இயற்கை விவசாயத்தில் களமிறங்கியுள்ளார். தற்போது நான்கு ஏக்கரில் இயற்கை விவசாய பண்ணை நடக்கிறது. 

    பாரதியார் சொன்ன கனவு போல காணி நிலம் தோட்டம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயற்கை விவசாயத்தை கையில் எடுத்துள்ளார். பாரதியாரின் வழிகாட்டுதலின்படி காணி நிலம் எங்கே பராசக்தி காணி நிலம் எங்கே வார்த்தைகளின் அடிப்படையில் இந்த காணிநிலம் தோட்ட பண்ணை அமைத்துள்ளார் விவசாயி சோமு.

    இந்த இயற்கை பண்ணை,  2011 - ஆம் ஆண்டு, இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு சான்றிதழ் தரும் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை (Tamilnadu Organic Certification of Department) ) மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்ணையின் தனி சிறப்பு என்னவென்றால், பல பயிர் சாகுபடி தான். அதுமட்டுமல்லாமல் மலைத் தோட்டப் பயிர்களை சமவெளியில் எப்படி பயிரிடலாம் என்பது குறித்தும் இந்த பண்ணையில் நாம் பார்க்கலாம். பல பயிர் சாகுபடியிலும் மலைத் தோட்டப் பயிர்களை சமவெளியில் பயிரிடுதலிலும், பயிரின் மத்தியில் ஊடுபயிர்களை பின்பற்றுவதும் போன்றவற்றில் வெற்றி கிடைத்திருக்கிறது.

    இது தொடர்பாக விவசாயி சோமு நம்மிடம் பேசுகையில், “இந்தப் பண்ணையின் பிரதான பயிராக தென்னை உள்ளது. தென்னையின் மத்தியில் ஊடு பயிராக மிளகு, வெற்றிலை, கோ-கோ பயிர், அண்ணாச்சி, மஞ்சள் போன்றவற்றை ஊடுபயிராக பயிரிட்டு வருகிறேன். மேலும் இந்த பண்ணையில் அதிக அளவில் சூரிய ஒளி  உள்ளே விழாது. இயற்கை மூடாக்கு போன்று இந்த பண்ணை காணப்படும். எப்போதும் இந்த பண்ணையில் ஈரமான மிதமான சூழல் இருந்து கொண்டே இருக்கும்.

    இயற்கை வேளாண் பண்ணை


    அதுமட்டுமல்லாமல் இப் பண்ணையில்  கீர், உப்பளச்சேரி என இரண்டு நாட்டு ரக  மாடுகள் உள்ளன. மாடுகளின் சாணத்தை கொண்டு இயற்கை உரங்களான அமிர்த கரைசல், ஜீவாமிர்தக் கரைசல்,மண்புழு உரம் போன்றவற்றை தயாரித்து அதையே இந்த பண்ணைக்கு உரமாக பயன்படுத்தி வருகிறோம்.

    மேலும் இந்த பண்ணையில், பேஸ்ட் ஏஜெண்ட எந்த பொருட்களும் நாங்கள் வெளியில் எடுத்து போடுவது இல்லை. மரத்திலிருந்து கீழே விழும் கேடுகள் இலைகள் என எதுவும் நகருவதில்லை அவை மக்கி உரமாக மாறுகிறது. மேலும் இந்தப் பண்ணையில் பாமாயில், பம்ப்ளிமாஸ் ஆகிய பயிர்களும் பயிரிட்டு உள்ளோம்.

    இப்பண்ணையில் உற்பத்தியாகும் தென்னை காய்களை நாங்கள் வெளியில் கொடுப்பதில்லை அதிலிருந்து தேங்காய் எண்ணெய் சமைப்பதற்கும் மூலிகை எண்ணெயாகவும், தென்னை நாற்றங்கால் அமைப்பதற்கு செடிகளாக தருகிறோம்.

    இயற்கை வேளாண் பண்ணை


    மேலும் இங்கு விளையும் கோ-கோ பீன்களை பவுடராக்கி வெளியில் விற்கிறோம், மேலும் தென்னையில் மத்தியில் ஊடுபயிராக போட மஞ்சளையும் அறுவடை செய்து பவுடராக விற்பனை செய்கிறோம். பிரதான பயர்களை விட ஊடு பயிர்கள் அதிகளவில் லாபமும் மகசூலும் தருகிறது. சாதாரண வருமானத்தை விட இந்த ஊடுபயிர்கள் அதிக வருமானம் தருகிறது. நான் என் பண்ணையிலேயே கோகோ பவுடர், மிளகு அறுவடை போன்றவை மேற்கொண்டு வருகிறேன்.

    என்னுடைய 4 ஏக்கர் காணி நிலம் பண்ணையில், மேற்கொண்டுள்ள ஊடுபயிர்கள் மூலமாக ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 4 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறேன். விவசாயம் என்பது என்றும் அழியாத ஒன்று.அதிலும் இயற்கை விவசாயம் செய்வது சிறப்பான ஒன்றாகும்.

    நிச்சயமாக அனைத்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களில் பிரதான பயிர்களுடன் ஊடுபயிர்கள் மேற்கொண்டால் நிச்சயமாக நல்ல லாபத்தையும் மகசூலையும் நாம் ஈட்ட முடியும் எனவும், விவசாயத்தை சிரமமாக செய்ய கூடாது எனவும் இயற்கை விவசாயி சோமு மற்ற விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக கூறினார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Organic Farming, Villupuram

    அடுத்த செய்தி