ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் தீபாவளி ஷாப்பிங் போலாமா... மகளிர் சுய உதவிக்குழு தயாரித்த விதவிதமான கைவினைப்பொருட்கள் விற்பனைக்கு..

விழுப்புரத்தில் தீபாவளி ஷாப்பிங் போலாமா... மகளிர் சுய உதவிக்குழு தயாரித்த விதவிதமான கைவினைப்பொருட்கள் விற்பனைக்கு..

விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் தீபாவளி ஷாப்பிங் போலாமா...

Villupuram Exhibition | விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில்மகளிர் சுயஉதவி குழுவினர்களின் உற்பத்தி பொருள்களுக்கான தீபாவளி சிறப்பு கண்காட்சிநடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினரின் உற்பத்தி பொருள்களுக்கான தீபாவளி சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் அலங்காரப் பொருட்கள் உணவுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

விழுப்புரம் பூமாலை வணிக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுயஉதவி குழுவினர்களின் உற்பத்தி பொருட்களுக்கான தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மோகன் துவக்கி வைத்தார். இந்த பூமாலை வணிக வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஒன்றியங்களின் கீழ் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் சுயமாக தொழில் தொடங்கிடும் வகையில் மானியத்துடன் கூடிய சுழல் நிதிக் கடனுதவியினை வழங்கி வருகிறார்கள்.

மேலும் படிக்க: விழுப்புரத்தின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தினை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. சுழல் நிதி கடனுதவி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் பல்வேறு வகையான கைவினைப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

கைவினைப்பொருட்கள்

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழு மூலம் தயாரிக்கப்படும் கைவினைப்பொருட்களை பொதுமக்களும் வாங்கி பயன் பெற்றிடும் வகையிலும், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வருமானத்தை பெருக்கிடும் வகையில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.இக்கண்காட்சி 17.10.2022 முதல் 23.10.2022 வரை நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: தமிழர் கட்டிடக்கலை வரலாற்றில் திருப்புமுனை... மண்டகப்பட்டு கோவில்! - இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!

கைவினைப்பொருட்கள்:

தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சி அரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களின் விற்பனை பொருட்களான உலோகங்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், தரமான வீட்டு உபயோகப் பொருட்கள், ஊறுகாய் வகைகள், நாட்டு மருந்துப்பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நாரினால் தயாரிக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், ஊதுபத்தி, சாம்பிராணி, சோப்பு வகைகள், பெனாயில், கதர் ஆடைகள், தைலம் வகைகள், சிறுதானிய பொருட்கள், சுடுமண் பொம்மைகள், மரபொம்மைகள், உணவு வகைகள், மண்பாண்ட பொருட்கள், சங்கு அலங்காரப் பொருட்கள் போன்றவை விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

மகளிர் சுய உதவிக்குழு தயாரித்த விதவிதமான கைவினைப்பொருட்கள்..

மேலும் படிக்க: தேவார பாடல் பெற்ற கடைசி சிவன் தலம் - விழுப்புரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா.!

இக்கண்காட்சியினை பொதுமக்கள் அதிகளவில் பார்வையிட்டு தங்களுக்கும் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடைவதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆதரவு தந்திட வேண்டும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே பொதுமக்கள் விலை குறைவாக உள்ள பொருட்களை இங்கு பார்த்து ரசித்து வாங்கிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Deepavali, Diwali, Local News, Villupuram