தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 120 மையங்களில், 25 , 565 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், நடந்த தேர்வில் 24, 652 மாணவர்கள் தேர்வு எழுதினர். மீதமுள்ள 913 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதேபோன்று, தனித்தேர்வர்கள் 689 பேரில், 626 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 63 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு கண்காணிப்பு பணியில் 157 பேர் பறக்கும் படை அலுவலர்களாக ஈடுபடுத்தப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 913 பேர் ஆப்சென்டாகினர்.
10 - ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் :
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 229 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்த நிலையில் 7,595 மாணவர்கள் 8,219 மாணவிகள் என மொத்தம் 15,814 பேர் தேர்வு எழுதினார்கள் இதில் 7,595 மாணவர்களில் 6490 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 1,103 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 8,219 மாணவிகளில் 7,770 மாணவிகள் தேர்ச்சியும், 449 மாணவிகள் தோல்வியும் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் 90.17 சதவிதம் ஆகும்.
12ம் வகுப்பு தேர்வு:
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 19,311 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 92.08 சதவீதம் ஆக உள்ளது.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் இன்று வெளியிட்டார். 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 133 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 13, 655 பேர் இதில் ஆண்கள் - 5504 மாணவர்களும்பெண்கள் -6917 மாணவிகள் என 12,321 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவிகிதம் 90.23 %ஆகும்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.