சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழுப்புரம் ஆட்சியர் மோகன், காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் சைக்கிளில் பதாகைகளை ஏந்தி நகர பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இயற்கை வளங்களான விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு, சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்க வேண்டும். அதன்படி சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்து விடுகிறது.
நவீன விஞ்ஞான தொழில்நுட்ப தொழில்துறை வளர்ச்சி, ரசாயன கழிவுகள், புகை, மாசு என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் 5 ஆம் தேதி சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்திலிருந்து வண்டி மேடு பகுதி வழியாக நகர பகுதிகளில் சைக்கிள் பேரணியை ஆட்சியர் மோகன் மற்றும் எஸ் பி ஸ்ரீநாதா கொடியசைத்து துவக்கி வைத்து சைக்கிளை ஓட்டி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சைக்கிள் பேரணியில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய,
நீர் வளம் காக்க நெகிழியை தவிர்ப்போம்!! எரிக்காதே எரிக்காதே.. பிளாஸ்டிக்கை எரிக்காதே!! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கொண்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தியும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.