ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் இஎஸ் பொறியியல் கல்லூரியில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்ட பயிற்சி வகுப்புகள்..

விழுப்புரம் இஎஸ் பொறியியல் கல்லூரியில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்ட பயிற்சி வகுப்புகள்..

விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு

Villupuram Latest News | 2025ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள், தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கும் விழுப்புரம் இ.எஸ் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தையொட்டி அமைந்துள்ளது இஎஸ் பொறியியல் கல்லூரி. இங்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை, மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்களின் கல்வி தான். இரண்டு ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஆரம்ப கல்வி பயிலும் பல மாணவர்களுக்கு எழுத்துக்கள் கூட மறந்து போய்விட்டன. இந்த இடைவெளியினால் மாணவர்களின் கற்றல் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக 'எண்ணும், எழுத்தும்' திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கும் பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கென தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தின்படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பார்கள்.

இந்த திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள், தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கும் விழுப்புரம் இ.எஸ் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் இருந்து, 504 ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு  வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ், கணிதம் ஆங்கிலம் உள்ளிட்ட பாடத் திட்டங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை நிறைவு செய்தபின்னர் ஒன்றாம், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பார்கள்.

மாணவர்களுக்கு எளிமையான முறையில் , பாடங்கள் புரியம் அளவிற்கு ஆசிரியர் சொல்லித்தர வேண்டும், ஆசிரியர்களுக்கும் - மாணவர்களுக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் ஏற்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்கள் நடனம், இசை, ஓவியம், பாடல் போன்ற செயல்கள் மூலம் எவ்வாறு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் ஒன்றிய அளவில் நடைபெற உள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் நிச்சயமாக ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க முடியும்..

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram