விழுப்புரம் புதியபேருந்து நிலையத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு அமைக்கபட்டிருந்த கடைகளை அகற்றியும், சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் நகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டது .
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட கூடிய கடைகள் பயணிகளின் நடைபாதையை, ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரமற்ற முறையில் ஈ மொய்த்த பழங்கள், திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பேருந்துகள் நிறுத்தும் இடத்தை வாகனங்கள், கடைகள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதாக நகராட்சி நிர்வாகதிற்கு புகார்கள் வந்தன.
புகாரை தொடர்ந்து இன்று நகராட்சி ஊழியர்கள் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கபட்டுள்ள கடைகளை அகற்றும் வேலையில் களமிறங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட பழங்கள், திண்பண்டங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் சுகாதரமற்ற முறையில் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கை செய்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.