ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் நாளை பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - விவரங்கள் அறிவிப்பு..

விழுப்புரத்தில் நாளை பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - விவரங்கள் அறிவிப்பு..

பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

viluppuram | விழுப்புரத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை சனிக்கிழமை (அக்டோபர் 15) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

மாவட்டம் தோறும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்கான தகுதிகள், சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்  நாளை சனிக்கிழமை (15ம் தேதி) நடக்கிறது.

ஓசூர் தனியார் நிறுவனத்தால் நடந்தப்பட உள்ள முகாம் காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. முகாமில், 2020-21 மற்றும் 2022ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 20க்குள் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : விழுப்புரத்தின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக 16,557 ரூபாய் மற்றும் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளுடன் கூடிய நிரந்தர பணி நியமனம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Vizhupuram