முகப்பு /செய்தி /விழுப்புரம் / மனைவிக்கு பாலியல் தொல்லை.. தம்பியை ஆள்வைத்துக் கொன்ற அண்ணன்... அம்பலமான நாடகம்..!

மனைவிக்கு பாலியல் தொல்லை.. தம்பியை ஆள்வைத்துக் கொன்ற அண்ணன்... அம்பலமான நாடகம்..!

கைது செய்யப்பட அண்ணன்

கைது செய்யப்பட அண்ணன்

villupuram Murder Case | நேற்று இரவு வீரமுத்து இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அவரது வீட்டருகே அவரை வழிமறித்த மர்ம நபர்கள் தலை மற்றும் கைகளில் பயங்கரமாக வெட்டி கொலை செய்தனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உடன் பிறந்த தம்பியை அண்ணனே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் சேர்ந்த சீனுவாசன்- தாய்ப்பால் தம்பதிக்கு  நாகமுத்து(41), தைமுத்து(37), மாரிமுத்து(34) மற்றும் வீரமுத்து என நான்கு மகன்கள் உள்ளனர். கடைசி மகனான வீரமுத்துக்கு  அங்கம்மாள் என்ற மனைவியும்,  2 வயதில் பெண் குழந்தை உள்ளது. வீரமுத்து சென்னையில் லாரி ஓட்டுநராக வேலை செய்தும் வரும் நிலையில்,  வாரம் ஒருமுறை ஜெயங்கொண்டான் கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு வீரமுத்து இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அவரது வீட்டருகே அவரை வழிமறித்த மர்ம நபர்கள் தலை மற்றும் கைகளில் பயங்கரமாக வெட்டியதில் படுகாயம் அடைந்தார்‌. அவரை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல் மேல்சிக்கிச்சைகாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: கேரளாவை அதிர வைத்த கொலை.. பெண் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற கொடூரம்

இந்த கொலை சம்பவம் தொடர்பாக செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் வீரமுத்துவின் உடன்பிறந்த அண்ணன் மாரிமுத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்தை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் தனது மனைவிக்கு வீரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை செய்ததாக மாரிமுத்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தம்பி வீரமுத்துவை கொலை செய்ய ஆட்களை அனுப்பிய மாரிமுத்து, எதுவும் தெரியாதது போல் 108 ஆம்புலன்ஸில் ஏறி வீரமுத்துவுடன் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

top videos

    செய்தியாளர் : குணநிதி

    First published:

    Tags: Crime News, Local News, Villupuram