ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் தொழில் தொடங்க ரூ.50 லட்சம் வரை நிதியுதவி - விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ..!

விழுப்புரத்தில் தொழில் தொடங்க ரூ.50 லட்சம் வரை நிதியுதவி - விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ..!

கடனுதவி

கடனுதவி

Viluppuram District | படித்த இளைஞர்களுக்கு விழுப்புரம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விண்ணப்பிக்கும் வழிமுறை பற்றிய விவரம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் படி, தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கூறுகையில், “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பல்வேறு தொழில் வழிகாட்டுதல் மற்றும் தொழில் துவங்க நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்படி, உற்பத்தி சார்ந்த தொழில் துவங்கிட, 15 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. சேவை சார்ந்த தொழில்கள் மற்றும் வியாபாரத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் வெள்ள பாதிப்பு இடங்கள் எத்தனை? - முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவு

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 35 வயது வரையிலும், பெண்கள், பின்தங்கிய வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 2.5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் படி, உற்பத்தி சார்ந்த தொழில் துவங்கிட, ரூ.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. சேவை சார்ந்த தொழில்கள் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு வரை படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க : செம்மரம், சந்தனமரம் வளர்க்க விருப்பமா? இதோ அரசே மரக்கன்று தருதாம்..! விழுப்புரத்தில் அடித்த ஜாக்பாட்!

திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினருக்கு நகர்புறத்தில் 15 சதவீதம், கிராமப்புறத்தில் 25 சதவீதம், சிறப்பு பிரிவினருக்கு நகர்புறத்தில் 25 சதவீதம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. உற்பத்தி சார்ந்த தொழில் மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்கிட, 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில், குறைந்தபட்சம் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ., பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில், பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 75 லட்சம் ரூபாய் வரை மற்றும் 3 சதவீத பின்முனை வட்டி மானியம் வழங்கப்படும்.

தொழில் துவங்க விரும்புவோர், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், விலைப் பட்டியல் (ஜி.எஸ்.டி., எண்ணுடன்), ஜாதிச்சான்றிதழ், திட்ட அறிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in/needs - www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் Agency - DIC தேர்வு செய்து விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து, நகலினை உரிய இணைப்புகளுடன் சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Villupuram