முகப்பு /செய்தி /விழுப்புரம் / வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தல்- எடப்பாடி பழனிசாமி சூசகம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தல்- எடப்பாடி பழனிசாமி சூசகம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யார் சீண்டிப் பார்த்தாலும் அவர்கள் தான் அழிவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Viluppuram, India

வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும். அப்போது அதிமுகவிற்கு விடியல் வரும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் சிவி.சண்முகம் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘எம்.ஜி ஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா தமிழக வரலாற்றில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார். இருபெரும் தலைவர்கள் வகித்த அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளீர்கள். அதிமுகவை அழிக்க வேண்டும், முடக்க வேண்டும் என நம்முடைய எதிரியான திமுக செய்த எத்தனையோ சூழ்ச்சிகளை முறியடித்து தொண்டர்களின் ஆதரவோடு திமுகவை வீழ்த்தும் மகத்தான பணியை எனக்கு வழங்கியுள்ளீர்கள்.

தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களில் ஒருவராக இருந்து தொண்டர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவேன். அதிமுகவை முடக்க வேண்டும் என்பதற்காக நம்மோடு இருந்து பிரிந்து திமுகவுடன் சேர்ந்து திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்கள். அவர்களையெல்லாம் நீதிமன்றத்தின் மூலமாக, சட்டத்தின் மூலமாக வென்று எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுவோம்.

எடப்பாடி பழனிசாமி, சிவி.சண்முகம்

இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு போட்டு வருகிறார். எத்தனை பொய் வழக்கு போட்டாலும் சட்டரீதியாக தகர்த்தெறிவோம். எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை ஜெயலலிதா பல்வேறு சோதனையான காலகட்டங்களை தாங்கி எம்ஜிஆர் கனவை இறுதி மூச்சு வரை நடத்தி காட்டினார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என தற்போதுவரை பல்வேறு சோதனைகளை அதிமுக சந்தித்து வருகிறது. எத்தனை சோதனை வந்தாலும் தொண்டர்கள் மூலம் அதனை வெற்றி பெறுவோம். அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணியை தொடர்ந்து செய்வோம். அதிமுகவை யார் சீண்டிப் பார்த்தாலும் அவர்கள் தான் அழிவார்கள். நம்முடைய தலைவர்கள் இறைவனால் கொடுக்கப்பட்டவர்கள்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. தொண்டர்களை தான் வாரிசாக பார்த்தார்கள். அதிமுகவை யாராலும் தொட்டுக்கூட பார்க்கமுடியாது. வழக்கு மூலம் அதிமுகவை அழிக்கப் பார்த்தால் அது கானல் நீராக தான் போகும். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும். அது வெகு தொலைவில் இல்லை.

உருமாறிய கொரோனாவால் பெரிய பாதிப்புகள் ஏற்படுமா? - விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

top videos

    வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் வரலாம். இதைதான் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் ஒரேநாடு ஒரே தேர்தல் என குறிப்பிட்டு வருகிறார்கள். வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வரும். நமக்கு விடியல் வரும். தொண்டர்கள் எறும்பைப்போல், தேனீக்களை போல் சுறுசுறுப்பாக பனியாற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami