Home /viluppuram /

மானியத்துடன் காளான் வளர்ப்பு.. வீட்டிலிருந்தே மாதம் ரூ.50,000 வருமானம்.. விழுப்புரம் நபரின் அசத்தல் பிசினஸ்..

மானியத்துடன் காளான் வளர்ப்பு.. வீட்டிலிருந்தே மாதம் ரூ.50,000 வருமானம்.. விழுப்புரம் நபரின் அசத்தல் பிசினஸ்..

விழுப்புரம்

விழுப்புரம் - காளான் வளர்ப்பு

Villupuram Mushroom Cultivation | விழுப்புரம் அருகே சாலை அகரம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் பால் காளான் உற்பத்தியில் மாதம் 50 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம் என்கிறார். காளான் வளர்ப்பு குறித்து அவர் கூறும் வழிகாட்டுதல்கள்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் மாவட்டம் சாலை அகரம் கிராமத்தில்  பால் காளான் மற்றும் சிப்பி காளான் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் பாண்டுரங்கன். பால் காளான் உற்பத்தியில் மாதம் 50 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம் என்கிறார்.

விழுப்புரம் அருகே சாலை அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (63). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வு பெற்ற பிறகு, உடல் நலத்தை பராமரிக்கவும் , பணி ஓய்வு பணத்தில் நல்ல தொழில் செய்யவேண்டுமென திட்டமிட்டிருக்கிறார். அதன்பிறகு காளான் வளர்ப்பில் ஆர்வம் ஏற்படவே, யூடியூப் பார்த்தும் புதுச்சேரிக்கு சென்று காளான் வளர்ப்பு குறித்து நேரில் கற்றுத் தேர்ந்தும் தற்போது பால் காளான், சிப்பிக் காளான் வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

பால் காளான் வளர்ப்பு பற்றி பாண்டுரங்கன் கூறியதாவது:

சாலை அகரம் கிராமத்தில் இரண்டு வருடங்களாக காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் இருந்து வந்தேன். வேலை ஏதும் இல்லாத காரணத்தால் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்றும், ஓய்வு பணம் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் எனவும் எண்ணி காளான் வளர்ப்பில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

இதையும் படிங்க:  அஜித் நடித்த இந்த பாடல் காட்சி இங்குதான் எடுக்கப்பட்டதா!... விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

பால் காளான் உற்பத்திக்கு தேவையான விதை பாக்கெட்டுகளை புதுவைக்கு சென்று வாங்கி வந்தேன். ஒரு கிலோ விதை பாக்கெட் 100 ரூபாய்க்கும், ஒரு விதை பாக்கெட் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. காளான் உற்பத்திக்கு தேவையான பொருள் வைக்கோல் விதை பாக்கெட் ஒரு பிளாஸ்டிக் கவர் போதும்.

காளான் வளர்ப்பு முறை:

நான் என்னுடைய இடத்தில் 300 சதுர இடத்தில் கூடாரம் அமைத்து பால் காளான் வளர்ப்பு செய்து வருகிறேன். கூடாரம் அமைப்பது, விதை பாக்கெட் போன்றவைக்கு 20,000 ரூபாய் செலவு செய்தேன். ஒரு கிலோ விதை பாக்கெட்டில் 3 காளான் படுக்கை செய்யலாம். இந்த படுக்கையை 28 நாட்கள் கழித்து இரண்டு துண்டாக வெட்டி,
ஒரு இன்ச் அளவிலான பிளாஸ்டிக் கவரில் மண்ணை நிரப்பி, பெட்டிய காளானை வைக்க வேண்டும். அதன்பின் தினமும் காலை அல்லது மாலை ஒரு முறை தண்ணீரை ஸ்பிரே செய்ய வேண்டும்.

அதன்பின் 32 நாட்கள் கழித்து அறுவடைக்கு தயாரான பால் காளானை நாம் கடைகளில் விற்பனை செய்யலாம். ஒரு கிலோ பால் காளான் 200 ரூபாய்க்கு விலை போகிறது,.
பால் காளான் அதிக அளவில் கரிசல் மண்ணில் நல்ல விளைச்சல் தரக் கூடியதாகும். மழைக் காலங்களில் பால் காளானை உற்பத்தி செய்தால் நஷ்டம் ஏற்படும்.ஏனென்றால் மழைக் காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதாவது 35 முதல் 45 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:  விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு குட்நியூஸ் : ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

50 - 60 ஆயிரம் லாபம்:

ஒரு காளான் படுக்கையில் மூன்று முறை நாம் பால் காளானை அறுவடை செய்யலாம். அதாவது ஒரு நாளைக்கு ஒரு படுக்கையில் இருந்து ஒரு கிலோ பால் காளானை அறுவடை செய்யலாம். இதுபோன்று ஒரு மாதத்திற்கு 20 ஆயிரம் செலவு செய்து, நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் குறைந்த பட்சம் 60 ஆயிரம் ரூபாய் வரை நாம் சம்பாதிக்க முடியும்.

காளான் வளர்ப்பில் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருப்பதற்கு முடிந்த அளவிற்கு காலம் கூடாரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் கிருமிகளை கண்டால் கிருமிநாசினி கொண்டு ஸ்பிரே செய்ய வேண்டும். நிச்சயமாக பால் காளாள் மூலம் மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கிறார் பாண்டுரங்கன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காளான் உற்பத்தி செய்வதற்கு தோட்டக்கலைத் துறையில் 50 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. காளான் உற்பத்தி செய்வதற்கு ஆர்வமாக இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு தோட்டக் கலைத் துறையை அணுகி அதன் விவரங்களை தெரிந்துகொள்ளலாம் எனவும் பாண்டுரங்கன் அறிவுரை வழங்கினார் .
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி