ஹோம் /விழுப்புரம் /

சம்பங்கி பூ சாகுபடியில் மாதம் ₹ 25,000 வருமானம்.. விழுப்புரம் பெண் விவசாயியின் சக்சஸ் ஃபார்முலா..!

சம்பங்கி பூ சாகுபடியில் மாதம் ₹ 25,000 வருமானம்.. விழுப்புரம் பெண் விவசாயியின் சக்சஸ் ஃபார்முலா..!

விழுப்புரம்

விழுப்புரம் - சம்பங்கி பூ வளர்ப்பு தொழில்முறை

Villupuram - Sampangi poo valarpu | சரியாக பராமரித்தால் நல்ல லாபம் தரும் என்கிறார் சம்பங்கி பூ சாகுபடியில் கலக்கி வரும் விழுப்புரம் சாலை கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி குங்குமச்செல்வி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலை கிராமத்தில் சம்பங்கி மலர் சாகுபடியில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பங்கி பூ சாகுபடி, சந்தைப்படுத்துதல் மற்றும் வருமானம் குறித்து தெரிந்து கொள்ள இந்த கிராமத்திற்கு  சென்றிருந்தோம்.

8 வருடங்களாக சம்பங்கி பூ சாகுபடி செய்துவரும் குங்குமச்செல்வியிடம், சம்பங்கி பூ சாகுபடி குறித்து விரிவாக பேசினோம். அவர் கூறியதாவது, “தொடர்ந்து 8 வருடங்களாக சம்பங்கி சாகுபடி செய்து வருகிறேன். முதன் முதலில் 4 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூவை பயிரிட்டேன்.

சம்பங்கி பூவின் எந்த வகை சிறந்தது?

சம்பங்கியில் 6 வகைகள் உள்ளன. அதில் பிரஜ்வால் ரகம் நல்ல சாகுபடி தரும். பக்க கிளைகள் அதிகம் வந்தால் அதிக மொட்டுக்கள் வந்து அதிக பூக்கள் கிடைக்கும்.  பக்க கிளைகள் அதிகமாக வர செடியை நன்றாக பராமரிக்க வேண்டும். நன்கு வளர்ந்த மூன்று ஆண்டுகள் ஆன செடியில் இருந்து கிழங்குகள் எடுக்க வேண்டும்.

குங்குமச்செல்வியின் சம்பங்கி பூ தோட்டம்

ஆடு எரு, வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை பயன்படுத்தி நிலத்தை நன்றாக பக்குவவப்படுத்தி ஒரு வாரம் காயவைத்து கிழங்குகளை ஊன்ற வேண்டும். அப்படி நட்டால் சரியாக 30-40 நாட்களுக்குள் கிழங்குகள் முளைக்கும். பாத்திகளுக்கு இடையே ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும். பின்னர் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.

மேலும் படிக்க : கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!

பூச்சி தாக்குதலை தடுக்க:

வேர் பூச்சி தாக்குதல் குறைப்பதற்கு சூடோமோனாஸ், டிரைகோடர்மா ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தெளித்தால் பூச்சி தாக்குதலை தடுக்க முடியும். செம்பின் மாவு பூச்சி தாக்குதலுக்கு வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.

குங்குமச்செல்வியின் சம்பங்கி பூ தோட்டம்

100% மானியத்தில் சொட்டு நீர் பாசனம்:

தோட்டக்கலை துறை மூலம் சிறுகுறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 100% மானியம் வழங்கப்படுகிறது. மேலும் பயிர் செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வழிமுறைகளை தெரிந்து கொள்வதற்கு தோட்டக்கலை துறை அதிகாரிகளை நாடினால் தேவையான விவரங்களை வழங்குகின்றனர்.

மேலும் படிக்க :  போடிமெட்டு சுற்றுலா... மெய்மறக்க வைக்கும் இயற்கை அழகு! - தேனி டூரிஸ்ட் ஸ்பாட்

3 வருடங்களில் செடிகள் நல்லா வளர்ந்த பின்னர் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிலோ வரை பூக்களை அறுவடை செய்ய முடியும். நாள் ஒன்றுக்கு சுமார் 1,000 ரூபாய் என மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் குங்குமச்செல்வி.

குங்குமச்செல்வி

சம்பங்கி மலர் அனைத்து விதமான விழாக்கள் மற்றும் விசேஷங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. அதனால் இந்த பூவுக்கு எப்போதும் நல்ல கிராக்கி உள்ளது. அதிக வருமானம் தரும் பயிர்களில் ஒன்றாகவும் இந்த சம்பங்கி பூ திகழ்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சரியாக பராமரித்தால் இதை பயிரிட்ட விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கிறார் குங்குமச்செல்வி .

Published by:Arun
First published:

Tags: Business, Local News, Villupuram