ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் தூசி மண்டலமான பிரதான சாலை.. வாகன ஓட்டிகள் அவதிக்கு முடிவு எப்போது?

விழுப்புரத்தில் தூசி மண்டலமான பிரதான சாலை.. வாகன ஓட்டிகள் அவதிக்கு முடிவு எப்போது?

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News | மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையின் நடுவே மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையின் நடுவே மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகள் முடிவடைந்த நிலையில், இதுவரை தார் சாலை அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையின் நடுவே மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த வடிகால் வாய்க்கால் பணிகள் முடிக்கப்பட்டு ஒரு மாதமாகிறது. வாய்க்கால் பணிகள் நடந்த இடத்தில் தார் சாலை அமைப்பதற்காக 2 வாரங்களுக்கு முன்னர் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சாலை முழுவதுமாக பரப்பப்பட்டன.

இருப்பினும் இதுநாள் வரையிலும் அங்கு சாலைஅமைக்கப்படவில்லை.

ஜல்லி கற்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில் அதன் மீது சிமெண்ட் மற்றும் ஜல்லி கற்கள் கலந்து போடப்பட்டது. வாகனங்கள் அடிக்கடி செல்லும் பிரதான சாலையாக இந்த சாலைகள் விளங்குவதால், சாலையில் சிமெண்ட் துகள்கள் பறந்து புழுதி மண்டலமாக காட்சி அளிக்கிறது.

மேலும் படிக்க:  விழுப்புரம் மாவட்டத்தில் இத்தனை சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளதா..!

வாகனங்கள் அதிவேகமாக செல்லும் போது பின்புறத்தில் வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் புழுதிக் காற்றால் பாதிப்படைந்து அவதியடைகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது, புழுதி காற்றை சுவாசிப்பதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விரைந்து தார்சாலை அமைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram