விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் தொடர்ந்து செஞ்சி, மேல்மலையனூர், பனமலைபேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வீடூர் அணையின் மொத்த கொள்ளளவு ஆன 32 அடியில் 29 அடிக்கு தண்ணீர் மட்டம் உயர்ந்தது.
இதனால் வீடூர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. வினாடிக்கு 112 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது வீடூர் அணை . 89 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959ம் ஆண்டு, தமிழக முதலமைச்சராக இருந்த காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.
அணையின் மொத்த நீளம், அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும்.
இந்த அணை தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.விரைவில் முழு கொள்ளளவை தொட்டுவிடும் என்பதால் எந்நேரத்திலும் அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்துவிடப்படும் நிலை உள்ளது.
இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆகவே, சங்கராபரணி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
அதுமட்டுமில்லாமல் அனைத்து நீர் நிலைகள் நிரம்பி வழியும் இந்த நேரத்தில், யாரும் நீர்நிலைகள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும்,வீடூர் அணையின் அருகாமையில் இருக்கும் விவசாயிகள்,ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்க்க, குளிப்பாட்ட ஓட்டிச் செல்லக்கூடாது, பொதுமக்கள் வீடூர் அணைக்கு பார்வையிட வரும் போது அருகில் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram